கன்னி ராசி நேயர்களே.. உங்க நல்ல நேரத்தை பாலிமர் டிவியில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
ஊடகங்களில் ஜோதிட நிகழ்ச்சிகளுக்கு தனி வரவேற்பு உண்டு. ராசிபலன், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, தினசரி, வார ராசிகளை சொல்வதைக் கேட்க ஆர்வமாக இருப்பார்கள்.
காலை நேரத்தில் பெரும்பாலான தமிழ் சேனல்களில்களில் ராசிபலன்தான் ஒளிபரப்பாகிறது. அந்த வரிசையில் பாலிமர் தொலைக்காட்சியில் நல்ல நேரம் என்ற நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.
இந்த நல்லநேரம் நிகழ்ச்சியில் ராசிபலன் சொல்வது மட்டுமல்லாது சற்றே வித்தியாசமானது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

நேயர்கள் நேரடி கேள்வி
பிற தொலைக்காட்சிகளில் இல்லாதது போல், நேயர்கள் நேரடியாக ஜோதிடர்களிடம் தொலைபேசி மூலம் தங்களது ராசிகளுக்கு உண்டான பலன்களை அறிந்து கொள்கின்றனர்.

பரிகாரங்கள் உண்டு
கஷ்டங்கள் தீர்வதற்கான பரிகாரங்களையும் ஜோதிடர்கள் விளக்கி கூறுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாம். மேலும் எந்தெந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது குறித்தும் பிரபல ஜோதிடர்கள் கூறுகின்றனராம்.

பிரபல ஜோதிடர்கள்
ஜோதிடர்கள் காழியூர் நாராயணன், எதார்த்த ஜோதிடர் ஷெல்வி, பூஷண்ஜி பழநியப்பன் உள்ளிட்டோர் விவரமாக கூறுவதால் நேயர்களுக்கு இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.

நேயர்களுக்கு பதில்
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்ரீவிஹானிகா கேட்கும் ராசிபலன் தொடர்பான கேள்விகளுக்கு ஜோதிடர்கள் பதிலளிப்பது நேயர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை நீக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











