»   »  'நமீதா... இம்மாம் பெரிய உடம்பு பூரா விஷம்தான் இருக்கா?'

'நமீதா... இம்மாம் பெரிய உடம்பு பூரா விஷம்தான் இருக்கா?'

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக இன்டஸ்ட்ரிக்குள் நமீதாவுக்கு அப்படி ஒன்றும் பெரிய நல்ல பெயர் கிடையாது. அவர் குணம் அப்படி. இப்போது பிக் பாஸ் வீட்டுக்குப் போன பிறகு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயே போச்.

விஷமத்தனத்தின் சிகரமாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார் நமீதா. காயத்ரி, ரைசா போன்றவர்களுடன் கூட்டணி போட்டுக் கொண்டு நமீதா பேசிய பேச்சுக்கள் கொடுத்த ஸ்க்ரிப்டுக்கு மேல் கூவுகிற ரகம்.

Namitha earns maximum bad name

குறிப்பாக ஓவியாவை 'அவ ஃபேமிலியே கேன்சர் ஃபேமிலிதான் தெரியுமா.. இவளுக்கும் கேன்சர் இருக்கு' என்றெல்லாம் பேசியதை பிக் பாஸ் நடத்தும் கமல் எப்படி சகித்துக் கொண்டார் என்று தெரியவில்லை. ஓவியாவின் அம்மா சமீபத்தில்தான் புற்று நோய்க்கு பலியானார். கேன்சர் நோயாளியான தன் தாயைப் பராமரிக்க ஓவியா பட்ட பாடுகளை திரையுலகில் உள்ள சிலர் அறிவார்கள். ஆனால் பிக் பாஸ் பரபரப்புக்காக எந்த லெவலுக்கும் போவேன் என்று காட்டிவிட்டார் நமீதா.

பெரிய வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகும்கூட ஓவியாவைக் குறை சொல்வதையே குறியாக வைத்திருந்தார் நமீதா. எப்படியாவது அவரை வெளியேற்றி விட வேண்டும் என்பதில், வெளியில் வந்த பிறகும் ஓவர் டைம் போட்டு வேலைப் பார்க்கிறார் நமீதா.

நமீதாவின் இந்த செயல்களைப் பார்த்து கடுப்பான வலைவாசிகள், 'இவ்ளோ பெரிய உடம்பு பூரா வெஷமாத்தான் இருக்கு போல' என திட்டித் தீர்க்கிறார்கள்.

நமீதா... சூரத்துக்கு பேக் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சி போல!

English summary
Namitha has earned maximum bad name through Big Boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil