பூஜா ஹெக்டேவுக்கு போட்டியான நமீதா மாரிமுத்து.. அரபிக் குத்துக்கு வேற லெவல் கவர்ச்சி குத்தாட்டம்!
சென்னை: பிக் பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து அரபிக் குத்து பாடலுக்கு போட்டுள்ள கவர்ச்சி நடனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டவர் நமீதா மாரிமுத்து.
உடல்நலக் குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் வாரத்திலேயே அவர் வெளியேறியது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

நம்பாத ரசிகர்கள்
ஆனால், அந்த காரணத்திற்காக எல்லாம் அவர் வெளியேறி இருக்க மாட்டார். உண்மையை விஜய் டிவியும் அவரும் வெளியே சொல்லாமல் மறைத்து வருகின்றனர். ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்குப் பின்னர் தான் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார் என பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
அதற்கு காரணம் நமீதா மாரிமுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதில் இருந்தே சமூக வலைதளங்களில் தொடர்ந்து செம ஆக்டிவாக இருந்து வருகிறார். ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருவதால் தான் ரசிகர்கள் அந்த விளக்கத்தை நம்ப மறுத்து வருகின்றனர்.

அரபிக் குத்துக்கு ஆட்டம்
மேலும், தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் நமீதா மாரிமுத்து. அவரது அரபிக் குத்து ஆட்டத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பூஜா ஹெக்டேவுக்கு போட்டி
பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே அரபிக் குத்து பாடலில் படு கவர்ச்சியான உடையணிந்து உடலை வளைத்து ஆட்டம் போட்டுள்ள நிலையில், நமீதா மாரிமுத்து அவருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு தொடையழகு தெரிய செம ஹாட்டான உடையை அணிந்து கொண்டு போட்டுள்ள குத்தாட்டம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பீஸ்ட்டுக்கு காத்திருக்கிறேன்
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 'Excited for Beast' என்றும் நமீதா மாரிமுத்து கேப்ஷன் போட ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் அவரது இந்த அரபிக் குத்து வீடியோவுக்கு ஹார்ட்டீன்களையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர். நடிகர் ரோபோ சங்கரின் மகளும் பிகில் பட நடிகையுமான இந்திரஜா சங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











