பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கப் போவது யார்?: இப்பவே சொன்ன தலைவி நமீதா
சென்னை: பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே ஆர்த்திக்கு ஜூலியை பிடிக்கவில்லை. படுக்கை விஷயத்தில் துவங்கிய பிரச்சனை ஆர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வரை தொடர்ந்தது.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஆர்த்தி ஜூலியை திட்டி வந்தார்.

ஆர்த்தி
டிஆர்பி குறையுது, டிஆர்பி குறையுது ஜூலியை நல்லா திட்டி அழ வைம்மா என்று பிக் பாஸ் அவ்வப்போது ஆர்த்தியிடம் கூற அவரும் வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் வேலை செய்தார்.

ஜூலி
ஆர்த்தி என்ன தான் திட்டினாலும் சொல்லிக் கொடுத்தபடி ஜூலி மீண்டும் மீண்டும் அவரிடமே சென்று பேசுவார். ஆர்த்தியும் ஜூலியை அழ வைப்பார். பின்ன பிக் பாஸ் நிகழ்ச்சி ஓட வேண்டாமா?

பிக் பாஸ்
ஆர்த்தி பிக் பாஸுக்கு ரொம்பவே விசுவாசமாக இருந்தார். ஆனால் பார்வையாளர்கள் யாருக்கும் அவரை கண்டாலே பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
நமீதா
ஆர்த்தி போன பிறகு அவரை போன்றே ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார் நமீதா. ஜூலி ஃபேக், ஓவியா ஃபேக் என்று கூறுகிறார் நமீதா. பிக் பாஸ் வின்னர் ஜூலி அல்லது ஓவியா என்கிறார் நமீதா.

ஆடியன்ஸ்
ஆடியன்ஸுக்கு நம்மள மாதிரி ஆளு பிடிக்காது, அந்த மாதிரி ஆள் தான் பிடிக்குது என்று நமீதா ரைசாவிடம் தெரிவித்துள்ளார். போகிற போக்கை பார்த்தால் தலைவியை மச்சான்ஸே கலாய்க்கும் நேரம் வந்துவிடும் போலயே.


Click it and Unblock the Notifications











