அய்யய்யோ எங்க நமீதா கண்கலங்கிடுச்சே: கொந்தளித்த மச்சான்ஸ்#biggboss
சென்னை: பிக் பாஸ் வீட்டில் நமீதா லைட்டா கண்கலங்கியதற்கே மச்சான்ஸ் எல்லாம் கொதித்துவிட்டார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி டல்லாக துவங்கியது. ஆனால் ஜூலி சொன்ன கட்டிப்பிடி விஷயத்தை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியே பரபரப்பாகிவிட்டது. நேற்று முழுவதும் நெட்டிசன்கள் ஜூலியை கலாய்த்தனர்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி குறித்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

வையாபுரி
இதுக்கு தான் இந்த மாதிரி எச்சைங்க கூட வரமாட்டேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறினார். இதை கேட்டு நடிகர் வையாபுரி அனைவர் முன்பும் அழத் துவங்கிவிட்டார்.

நமீதா
வையாபுரி ஒரு புறம் அழ மறுபுறம் நம்ம நமீதா கண்ணில் தண்ணீர். அவர் டிஷு பேப்பரால் கண்ணீரை துடைப்பது போன்று ப்ரொமோ வீடியோவில் காட்டியுள்ளனர்.
மச்சான்ஸ்
வையாபுரி அழுதபோது கூட டென்ஷன் ஆகாத மச்சான்ஸ் எல்லாம் நமீதா அழுவதை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டனர். எங்க நமீதாவை இப்படி கண்கலங்க விட்டுட்டீங்களேடா என்று கொந்தளிக்கிறார்கள்.

மகிழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 14 பேரை அறிமுகம் செய்தபோது இல்லாத மகிழ்ச்சி 15வது ஆளாக நமீதாவை அறிமுகம் செய்தபோது மச்சான்ஸ்களுக்கு ஏற்பட்டது. இப்பத் தான்டா சந்தோஷமாக இருக்கு என்று மச்சான்ஸ் ட்வீட்டினர். இந்நிலையில் நமீதா அழுதால் சும்மா இருப்பார்களா?


Click it and Unblock the Notifications











