»   »  இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் நிச்சயம் பார்ப்பாங்க: ஏன்னா...

இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் நிச்சயம் பார்ப்பாங்க: ஏன்னா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறேன் என நமீதா கிளம்புவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துகள் தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் முழுநேர கான்செப்ட்டாக உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

ஆண்டவரே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டாம் என்று கமல் ஹாஸனுக்கு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமீதா

கோபித்துக் கொண்டு நமீதா பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பப் போகிறேன் என்று கூறி தனது பேக்கை எடுப்பது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஜூலி

ஜூலி

சும்மா, சும்மா ஜூலியை அழவிட்டே டிஆர்பி ஏத்துறாங்க என்று ஆளாளுக்கு கலாய்த்து வரும் நிலையில் நமீதா பக்கம் திரும்பியுள்ளனர். மச்சான்ஸ்களை நம்பியே இந்த டிராமா.

ஓவியா

ஓவியா

ஓவியா, கஞ்சா கருப்பை அவ்வப்போது மோதவிட்டும் டிஆர்பியை ஏற்றுகிறார்கள். இருப்பினும் ஜூலியை அழ வைக்கும் ரேஞ்சுக்கு இவர்களின் சண்டை ஒர்க்அவுட் ஆவது இல்லை.

காயத்ரி

காயத்ரி

காயத்ரி ரகுராம், ஆர்த்தி ஒன்று சேர்ந்து ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துவதை ஒரு வேலையாகவே வைத்துள்ளனர். காயத்ரி, ஆர்த்தியை முதலில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

English summary
According to a new promo video, actress Namitha is seen packing her bag to leave the big boss house immediately.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil