மீண்டும் வருது நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சி.. இந்த முறை விஜய் டிவிக்கு பதில் விஜய் மியூசிக்கில்!

சென்னை: பிரபலங்களின் திருமண நிகழ்ச்சியை அவர்களே தொகுத்து வழங்கி அதில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறும் நிகழ்ச்சி விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் எனும் பெயரில் ஒளிபரப்பானது.

விஜய் டிவியை சேர்ந்த ஏகப்பட்ட பிரபலங்களின் திருமணங்கள் மற்றும் நடிகர்களின் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது விஜய் மியூசிக்கில் அந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக போகிறது என்கிற அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களுக்கு ஆர்வம்

ரசிகர்களுக்கு ஆர்வம்

சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு அதில், கூடுதல் ஆர்வம் எழத்தான் செய்கிறது. நம் மனதுக்கு பிடித்த நடிகர்கள் யாரை திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களது திருமண விழா எந்த அளவுக்கு கிராண்டாக நடைபெற்றது. கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள் யார் யார்? என்கிற பல சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்து கொள்ள எப்போதுமே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நம்ம வீட்டுக் கல்யாணம்

நம்ம வீட்டுக் கல்யாணம்

அப்படிப் பட்ட ரசிகர்களை டார்கெட் செய்து அவர்களை என்டர்டெயின் செய்ய விஜய் டிவியில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் நம்ம வீட்டுக் கல்யாணம். விஜய் டிவியின் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் தங்கள் திருமண அனுபவத்தை வீடியோ, புகைப்படங்கள் என ஏகப்பட்ட விஷயங்களுடன் அந்த நிகழ்ச்சியில் ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

மீண்டும் வருது

மீண்டும் வருது

கொரோனா காலமாக திருமணங்களே குறைவான ஆட்களுடன் பல கட்டுப்பாடுகளுடன் நடந்த நிலையில், நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் அந்த நிகழ்ச்சி புத்தம் புதுப் பொழிவுடன் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க வரும் பிப்ரவரி 26ம் தேதி முதல் தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் மியூசிக்

விஜய் மியூசிக்

இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி இனிமேல் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் காட்சிகளை ஒளிபரப்பி விஜய் மியூசிக்கை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்திய நிலையில், தற்போது நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியும் ரசிகர்களை விஜய் மியூசிக் பக்கம் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகுல் திருமணம்

நகுல் திருமணம்

வரும் சனிக்கிழமை பிப்ரவரி 26ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக நடிகர் நகுல் தனது திருமண அனுபவத்தை பகிர்ந்து கொள்ள போகிறார். நடிகர் நகுல் மற்றும் ஸ்ருதி கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களது திருமணத்தில் நடந்த சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்ய காத்திருக்கிறார்.

பிக் பாஸ் ஆரி

பிக் பாஸ் ஆரி

நகுலை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 27) காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் நடிகர் ஆரி அர்ஜுனனின் திருமணம் எப்படி நடந்தது? யாரெல்லாம் கலந்து கொண்டனர் என ஏகப்பட்ட விஷயங்களை அவரும் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X