தேனாம்பேட்டை சிக்னலில் ஓகே ஆன திருமணம்…. சின்னத்திரை நடிகை பூஜா

By Mayura Akilan

திருமண ஆல்பத்தை திரும்பி பார்ப்பது சந்தோசமான விசயம். அதையே நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறது விஜய் டிவி. பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றன.

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ பிரபலங்கள் திருமண வாழ்க்கையும், அதன் நிகழ்வுகளையும் அறிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு அலாதியான விருப்பம் உண்டு.

இதனை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம், சூர்யா - ஜோதிகா, சிநேகா - பிரசன்னா என பல பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. இந்தவாரம் சின்னத்திரை நடிகை பூஜாவின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள்

சின்னச் சின்ன சர்ப்ரைஸ்கள்

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கணவர் மதுவிற்கு அழகான வாட்ச் கொடுத்து சர்ப்ரைஸ் செய்தார் பூஜா.

சூட்டிங் ஸ்பாட்டில் காதல்

சூட்டிங் ஸ்பாட்டில் காதல்

முதன் முதலாக சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தோம். பர்ஸ்ட் இம்ரஸன் சரியாக அமையலை. அப்புறம் சில நாட்களில் காதலை

சொன்னார் மது என்று காதல் பூத்த தருணத்தை கூறினார் பூஜா.

சிக்னலில் ஓகே வாங்கினேன்.

சிக்னலில் ஓகே வாங்கினேன்.

திடீர் காதலை வீட்டில் சொல்ல தயங்கிய பூஜை தேனாம்பேட்டை சிக்னல் நிறுத்தத்தில் காதலை சொல்லி ஓ.கே. வாங்கினதாக கூறினார்.

கல்யாணத்தில் கலாட்டா

கல்யாணத்தில் கலாட்டா

தன்னுடைய திருமணத்தில் சின்னத்திரை நட்சத்திரங்கள் திரளாக கலந்து கொண்டனர் என்று கூறிய பூஜா, நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு, சரண் குழுவினரின் இசைக்கச்சேரியும், அதற்கு சின்னத்திரை நடிகைகள் குயிலி, பிருந்தா தாஸ், ஐஸ்வர்யா ஆகியோரின் குத்தாட்டம் போட்டதையும் நினைவு கூர்ந்தார்.

காதலும் கல்யாணமும் சூப்பர்

காதலும் கல்யாணமும் சூப்பர்

காதல் வாழ்க்கையைப் போல கல்யாண வாழ்க்கையும் சுகமாக போவதாக கூறும் பூஜா... சண்டை போட்டால் முதலில் தான்தான் சமாதானம் ஆவதாக கூறினார். பூஜா விவரித்த ஒவ்வொரு சம்பவங்களும் சுவாரஸ்யமாக இருந்தது

ஹிட் அடித்த பிரபல ஜோடிகள்

ஹிட் அடித்த பிரபல ஜோடிகள்

இந்த நிகழ்ச்சியில் சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா, உள்ளிட்ட பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகள் ஹிட் அடித்துள்ளன. பெரும்பாலானவை மறு ஒளிபரப்பும் செய்யப்பட்டுள்ளது.

ஷில்பாவுக்கு கல்யாணம் ஆயிருச்சே

ஷில்பாவுக்கு கல்யாணம் ஆயிருச்சே

நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷில்பாவுக்கு பரத் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நிகழ்ந்துவிட்டது. இதனால் இவர் நிகழ்ச்சி தொகுப்பை விட்டுவிட்டு இல்லத்தரசியாக சென்றுவிட்டார். எனவே இப்போது திவ்யதர்ஷினி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

டி.டிக்கு எப்போ கல்யாணம்?

டி.டிக்கு எப்போ கல்யாணம்?

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் டி டி பிரபலங்களை பேட்டி கண்டது அழகாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் டிடியைப் பார்த்து எப்போ கல்யாணம் என்று பூஜா கேட்க இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று கூறி சமாளித்தார் டிடி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X