சின்னத்திரை பக்கம் வந்த நந்திதா ஸ்வேதா… என்ன சீரியல் தெரியுமா?
சென்னை : சன் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளின் மனத்தை கவர்ந்த அபியும் நானும் தொடர் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணிநேர தொடராக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த தொடரில் சிறப்புத் தோற்றத்தில் இளம் நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்.
நந்திதா ஸ்வேதாவை தங்கள் அபிமான சின்னத்திரை நடிகர்களுடன் இணைந்து, நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பல தொடர்கள்
சன் தொலைக்காட்சியில் ரோஜா, சித்தி2, கண்ணான கண்ணே, அன்பே வா ,பூவே உனக்காக என பல நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடருக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

மனம் கவர்ந்த தொடர்
அந்த வகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் அபியும் நானும். இந்த தொடரில் வித்யா மோகன் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ரியா மனோஜ் மற்றும் நிதிஷ் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வருகின்றனர். நகைக்சுவை மற்றும் குடும்ப உறவுகளை முன்வைத்து இத்தொடர் உருவாகிஉள்ளது.

சிறப்பு தோற்றத்தில்
பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு சிறப்பு ஒரு மணி நேர காட்சியாக சன் டிவியில் வெளியாக உள்ளது. இதில் இளம் நடிகை நந்திதா ஸ்வேதா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரகுவிற்கு பார்த்துள்ள பெண்ணாக வந்துள்ளார். இந்த ப்ரோமோ சன் டிவி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
வெள்ளித்திரையில் மட்டுமே நடித்து வந்த நந்திதா ஸ்வேதா, முதன்முறையாக சின்னத்திரையில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். நந்திதா ஸ்வேதாவை தங்கள் அபிமான சின்னத்திரை நடிகர்களுடன் இணைந்து, நடிப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

3 படங்களில்
செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர், ஐபிசி 376, இடம் பொருள் ஏவல் மற்றும் வணங்காமுடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications