நாஞ்சில் விஜயனை மட்டுமில்ல.. ஜாய் கிரிஸில்டா வம்புக்கு இழுத்த வைஷூ.. வெளியில் வந்த ஆதாரம்!
சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன், தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக திருநங்கை விஜே வைஷு கமிஷ்னர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகாரை வைஷூ திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில், நேற்று மீண்டும் நாஞ்சில் விஜயனை அசிங்கப்படுத்தும் வகையில் ஒரு பதிவினை போட்டு இருந்தார். இதற்கு நாஞ்சில் விஜய், தனது இன்ஸ்டாகிராமில் அடுத்தவர்களின் குடும்பத்தை கெடுக்க நினைப்பவள் என அதிரடியான ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நாஞ்சில் விஜயன், விஜய் குறித்து பேசி இருந்தார். அதில், விஜய்யும் திரிஷாவும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். அவர்கள் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சேர்ந்து சென்றிருக்கலாம். அதை நாம் பெரிதுபடுத்தி பேச வேண்டாம். திரிஷாவை திருமணம் செய்து கொண்டாலும் நாம் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும், அதை விமர்சிக்கக்கூடாது என்றும் அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

நாஞ்சில் விஜயன் விவகாரம்: நாஞ்சில் விஜயனின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நடிகை விஜே வைசு, தனது இன்ஸ்டாகிராமில் நாஞ்சில் விஜயனுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து. நீங்க விஜய்க்கு சப்போர்ட் பண்றீங்க. ஆனால் என்னுடைய மனதை மட்டும் புரிந்து கொள்ளாமல் என்னை புறக்கணிக்கிறீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு, அவர் ஒரு ரீல்ஸ் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் நாஞ்சில் விஜயன் மற்றும் வைஷு இருவரும் சேர்ந்து சேதுபதி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரிலீஸ் எடுத்திருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசப்பட்டது.
நாஞ்சில் வெளியிட்ட ஆதாரம்: இதையடுத்து, நாஞ்சில் விஜயன், வைஷுவின் மாஸ்டர் பிளான் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நான் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற போது வழக்கறிஞர் பிரபு தான். நீயும் ஒரு நடிகை, அவரும் ஒரு நடிகராக இருப்பதால் காதலித்து ஏமாற்றி விட்டார், சேர்த்து வையுங்கள் என சொன்னால், கமிஷ்னர் அலுவலகத்தில் வழக்கை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதனால் என்னை ஏமாற்றினான், எனக்கு பணம் தர வேண்டும் என சொல்லு என்றார். அந்த பேச்சை கேட்டுத்தான் நான் அப்படி பேட்டி கொடுத்தேன். இதைப்பார்த்துத்தான், பிரபுவை ஒரு பெரிய ஆளாக நினைச்சிட்டு, ஜாய் கிரிஸ்டில்லா பிரபுவிடம் தனது வழக்கை ஒப்படைத்தார்கள்.
ஆடியோ ஆதாரம்: பிரபு மூலமாகத்தான் ஜாய் கிரிஸ்டில்லா சிஎம்மை சந்தித்தாங்க, இப்ப அவங்க ரெண்டு பேரும் க்ளோசா இருக்காங்க. எல்லாமே பிரபு சொல்லித்தான் நான் செய்தேன் என பேசி உள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கும் நாஞ்சில் விஜயன், இப்பொழுது புரிகிறதா இவளுடைய சுயரூபம் என்னவென்று தான் புகழடைய வேண்டும் என்பதற்காக மற்றவர் குடும்பத்தை பற்றி கூட கவலைப்படாமல் கேடு விளைவிப்பவள். இவளை திருநங்கை சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் தான் கண்டிக்க வேண்டும், அவர்கள் கையிலேயே இவளை ஒப்படைத்து விடுகிறேன். இதற்கு மேலாவது இது போன்றவர்களை இன்டர்வியூ எடுப்பதை மீடியாக்கள் தவித்துக் கொள்ளவும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











