twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன்டிவியில் சங்கமித்த கனவுக்கன்னிகள்... கவர்ச்சி நாயகிகள்... வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு!

    By Mayura Akilan
    |

    சென்னை: திரைவானில் ஒரு காலத்தில் நட்சத்திரங்களாக மின்னிய கதாநாயகிகளும், பலரின் தூக்கம் தொலைத்த கவர்ச்சி நாயகிகளும் ஒரே இடத்தில் குவிந்தால் எப்படி இருக்கும். அந்த ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்று ஒரே ப்ளாஷ் பேக்தான்.

    எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், ரவிச்சந்திரன், ஜெய்சங்கருடன் நாயகிகளாக நடித்த நாயகிகள் ஒன்றாக கூடி தங்களின் நினைவுகளை பரிமாறிக்கொண்டதோடு, அப்போதய படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் நடிகர்கள். நட்சத்திர கிரிக்கெட், நாடகம், டிவி நிகழ்ச்சி என நடத்தும் நடிகர்கள் அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் ரூ. 26 கோடியில் அதிநவீன வசதிகளைக் கொண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்துள்ளனர்.

    நடிகர் சங்க கட்டிடத்தில் 1,000 பேர் அமரக்கூடிய பெரிய அரங்கம், பெரிய திருமண மண்டபம், சிறிய திருமண மண்டபம், ப்ரிவியூ திரையரங்கம், சங்க அலுவலகம், உடற்பயிற்சிக் கூடம், நடிப்பு மற்றும் நடனப் பயிற்சிக் கூடம் ஆகியவை இடம்பெற உள்ளன.

    நட்சத்திர சங்கமம்

    நட்சத்திர சங்கமம்

    நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் முன்னோட்டமாக சன்டிவியில் நட்சத்திர சங்கமம் என்ற நிகழ்ச்சியை நேற்று ஒளிபரப்பினார்கள். இதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி சிவகுமார், கார்த்தி, வடிவேலு, பசுபதி, ரமணா, மோகன், உதயா, சுரேஷ், நந்தா உட்பட பல நடிகர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

    அன்றைய கனவுக்கன்னிகள்

    அன்றைய கனவுக்கன்னிகள்

    60களில் நடித்து கனவுக்கன்னிகளாக புகழ் பெற்ற நடிகைகளான சரோஜாதேவி, விஜயகுமாரி, காஞ்சனா, எம்.என். ராஜம், லதா, பாரதி, ஷீலா, சச்சு, ஜெயசித்ரா, ‘வெண்ணிற ஆடை' நிர்மலா, சாரதா, ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    கவர்ச்சிக்கன்னிகள்

    கவர்ச்சிக்கன்னிகள்

    பலரின் தூக்கத்தைத் தொலைத்த ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சிஐடி சகுந்தலா, அனுராதா, ஒய்.விஜயா,குயிலி, ஷர்மிலி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி அசத்தினர்.

    பானுப்பிரியா ரோகிணி

    பானுப்பிரியா ரோகிணி

    சுகாசினி, ராதா, பானுப்ரியா, ரோகிணி, மேனகா, பூர்ணிமா பாக்யராஜ், லிசி, அர்ச்சனா, ரஞ்சனி, ரம்யாகிருஷ்ணன் லலிதாகுமாரி, ஆகிய நடிகைகளும் பங்கேற்று சீனியர் நடிகைகளின் நினைவுகளை வெளிக்கொணர்ந்தனர்.

    சரோஜா தேவி

    சரோஜா தேவி

    எம்.ஜி,ஆருடன் அதிக படங்களில் நடித்த சரோஜா தேவி, அன்பே வா படத்தில் நடித்த போது சில சம்பவங்களை நினைவு கூர்ந்தார். ஆஞ்சநேயர் விரதம் இருந்ததையும், அதற்காக எம்.ஜி.ஆர் கொண்டு வந்த பிரியாணியையும் வேண்டாம் என்று சொன்னதாகவும் கூறினார்.

    109 டிகிரி வெயிலில் நடித்தோம்

    109 டிகிரி வெயிலில் நடித்தோம்

    ரோஜா மலரே ராஜ குமாரி என்று பாடிய சச்சு, இன்றைக்கு போல அப்போது எல்லாம் எங்களுக்கு கேரவன் போன்ற வசதிகள் கிடையாது. புளியமரத்தடிதான். 109 டிகிரி வெயிலில் ஒகேனேக்கல் பாறையில் நிற்க வைத்து விட்டார்கள் என்றார். கஷ்டப்பட்டு நடித்தோம். இப்போது போல வெளிநாடு சூட்டிங் எல்லாம் கிடையாது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சச்சு.

    கார்த்தியுடன் நடனம்

    கார்த்தியுடன் நடனம்

    நடிகை விஜயகுமாரி, தான் எப்படி எம்.ஜி.ஆருக்கு தங்கையாக மட்டுமே நடித்தேன் என்று கூறினார். இன்றைய நடிகர்களில் தனக்கு கார்த்தி சரியான ஜோடி என்று கூறியதோடு ஒரு பாட்டுக்கு நடனமாடினார்.

    முதல்மரியாதை ரஞ்சனி

    முதல்மரியாதை ரஞ்சனி

    முதல்மரியாதையில் அறிமுகமாகி சில படங்களோடு பேக் அப் ஆகி விட்ட நடிகை ரஞ்சனி, தான் நடிக்க வந்த கதையைக் கூறினார். பாக்யராஜ் நேரில் வந்து அழைத்ததையும், பாரதிராஜா தொலைபேசியில் நடிக்க கூப்பிட்டதையும் பகிர்ந்து கொண்டார்.

    மனோபாலா - கோவை சரளா - வடிவேலு

    மனோபாலா - கோவை சரளா - வடிவேலு

    மனோபாலாவும், கோவை சரளாவும் இணைந்து சில நிமிடங்கள் சிரிக்க வைத்தனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வடிவேலு நடிகைகளைப் பற்றியும், அவர்கள் நடித்த படங்களைப் பற்றியும் கூறி அழகாக தொகுத்து வழங்கினார்.

    தலைமுறைகளைக் கடந்தும்

    தலைமுறைகளைக் கடந்தும்

    70, 80களில் நடித்த பல நடிகைகள் உடல்நலம் குன்றி வெளியே தலை காட்டாமல் இருக்கின்றனர். ஆனால் 60 களில் திரைவானில் நட்சத்திரங்களாக மின்னிய பிரபல நடிகைகள் 45 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதே உற்சாகத்தோடு வந்திருந்து தங்களில் நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு இளம் தலைமுறை நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    டேக் ஏ செல்ஃபி

    டேக் ஏ செல்ஃபி

    அன்றைய கனவுக்கன்னிகள் பலரும், இன்றைய நட்சத்திரங்களுடன் இணைந்து உற்சாகமாக செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். ஓல்டு ஈஸ் கோல்டுதான். இந்த களேபரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தெறி ஆடியோ வெளியிடு பார்க்க முடியாமல் போனதுதான் சோகம்.

    English summary
    Natchathira Sangamam, All Kollywood Celebrities under one roof on Sunday at 2pm at SunTV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X