பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு பதில் இவரா? யாருனு கொஞ்சம் பாருங்க !
சென்னை : பாரதி கண்ணம்மா சீரியலிருந்து ரோஷினி விலகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்று சொல்லலாம்.
Recommended Video
விறுவிறுப்பான பல திருப்பங்களுக்கு இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ள இந்த சீரியல் இனி கண்ணம்மா கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் அடுத்து நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஏராளமான ரசிகர்கள்
தமிழ் சீரியல்களில் தற்போதைய டிரெண்டில் படு ஹிட் சீரியல் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரயலில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினியை பார்க்கவே ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு.

முதலிடம்
பாரதி மற்றும் கண்ணம்மாவின் காதலில் தொடங்கிய சுவாரசியம் ரசிகர்களுக்கு பிடித்துப்போக இந்த சீரியலை கொண்டாடத் தொடங்கி விட்டனர். விஜய் டிவியில் டிஆர்பியில் இந்த தொடர்தான் முதல் இடத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் பிரிந்த போதுகூட இந்த சீரியலின் டிஆர்பி குறையவில்லை அந்த அளவுக்கு இந்த தொடருக்கு ரசிகர்கள் உண்டு.

ரோஷினி விலகினார்
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், இவ்வளவு நாட்களாக தனக்கு ஒரே ஒரு மகள் மட்டுமே நினைத்துக் கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு, இரண்டு குழந்தைகள் பிறந்தது தெரிந்துவிட்டது. இன்னொரு மகள் ஹேமா என்ற உண்மையும் தெரிந்து விட்டது. ஹேமா மீது கண்ணம்மா எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அதிகமான அன்பும் பாரதிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது. பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சீரியலில் இருந்து திடீரென்று விலகினார் கண்ணம்மா.

நட்சத்திரா
இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் இவருக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதையடுத்து, யாரடி நீ மோகினி நாடகத்தில் கதாநாயகியாக நடித்த நட்சத்திராவை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இணைந்து நடித்துள்ளனர்
யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலாவாக நடித்த நட்சத்திராவிற்கு ஏற்கனவே ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அதேபோல பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்த லிசா ஏற்கனவே யாரடி நீ மோகினி தொடரில் நட்சத்திராவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதால் அவரை இந்த தொடரில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











