Nayagi serial: போரடிக்குதே நாயகி ரேட்டிங்ல எப்படி இருக்கும்?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் உருவாகி, தினம் இரவு 8 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனந்தி, திருவின் பிரச்சனைகள் முடிந்து இருவரும் இப்போது சேர்ந்து வாழ்கின்றனர்,
திருவின் அப்பா கலிவரதன் பிடுங்கி சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் வாரிசு ஆனந்திதான் என்றும் தெரிந்து விட்டது. சொத்துக்களை மீட்டாக வேண்டுமென்பது மட்டும்தான் கதையில் பாக்கி.
ஆனந்தியின் தோழி கண்மணிக்கு, இன்னமும் பிரச்சனை கொடுத்து வருகிறாள் கண்மணி புருஷன் செழியன் மீது ஆசை வைத்து இருக்கும் சுஹாசினி. கதையில் இந்த பிரச்சனைகள் மட்டுமே இருக்கிறது.

திரு ஆனந்தி
சன் டிவி ரேட்டிங்கில் ஆரம்பித்த காலம் தொட்டு முதலிடத்தில் இருந்து வருவது நாயகி சீரியல்தான். இந்த இடத்தை வேறு எந்த சீரியலாலும் பிடிக்க முடியவில்லை. ஆனால், இப்போது கதை கிட்டத்தட்ட எந்த பிரச்சனையும் இல்லை எனும் அளவுக்கு ரொம்ப நீட்டா எளிமையா போய்கிட்டு இருக்கு. எந்த புதிர், போட்டி இல்லாத இந்த சீரியல் இப்போது போரடிக்க ஆரம்பித்து உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சன் டிவியின் சூப்பர் ஹிட் பிரைம் டைம் நேரமான இரவு 8 மணி ஸ்லாட் என்பது இனி நாயகி மூலம் கை கொடுக்காது என்றே தோன்றுகிறது.

கண்மணி செழியன்
கண்மணி ஆனந்தி இருவரும் மிக நெருங்கிய தோழிகள். இன்னமும் சீரியலில் அந்த பார்ட் ரொம்ப நல்லாவே போயிகிட்டு இருக்கு. அனந்திக்கும், திருவுக்கும் கல்யாணம் ஆவதற்கு முன்பே, கண்மணிக்கும் செழியனுக்கும் கல்யாணமானது. செழியனுக்கு கெட்டவள் சுஹாசினியைத்தான் பேசி முடித்திருந்தார்.ஆனால், இதை பொறுத்துக்க முடியாத கண்மணி, செழியன் தன்னை கெடுத்து விட்டதாக நாடகமாடி அவனை கல்யாணமும் செய்துக்கறா. அன்று ஆரம்பிக்கிறது, சுஹாசினிக்கும், கண்மணிக்குமான பகை. அது இன்றுவரை வெவ்வேறு விதத்தில் தொடர்வதால் இன்னமும் கண்மணி செழியனுக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கவில்லை.

கர்ப்பவதியாக ஆனந்தி
கண்மணி செழியனுக்கு பின்னால் கல்யாணம் ஆனது ஆனந்தி திரு இருவருக்கும். இவர்களே எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்தும்
இவர்களுக்குள் நடக்க வேண்டியது நடந்து இப்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாள்.இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் நாயகி சீரியலில் முடிவு வந்துவிட்ட நிலையில், ஆனந்திதான் திருவின் அப்பா கலிவரதன் சொத்துக்களுக்கு வாரிசு என்கிற ஹைலைட் உண்மையும் தெரிஞ்சு போச்சு. இனியும் கதையை ஜவ்வு மாதிரி இழுக்கக் கூட அங்கே ஒண்ணுமில்லை.

சீரியலை முடிப்பாங்களா?
விகடன் டெலிவிஸ்டாஸ் ஹிட் சீரியலான தெய்வமகள் தொடர் கடைசியில் சப்பென்று முடிக்கும் அளவுக்கு ஜவ்வு மாதிரி கதையை இழுத்து, போரடிக்க வச்சுட்டாங்க.. இப்போது இதே நிலைமைக்குத்தான் நாயகி சீரியலும் தள்ளப்பட்டு இருக்கு.இதை இயக்குநர் உணர்ந்து செயல்பட்டு, கதையை ஜவ்வு மாதிரி இழுக்காமல் நச்சுன்னு கடைசி எபிசோட்களை வைத்து.சட்டு புட்டுன்னு முடிச்சுகிட்டா, அடுத்த சீரியலை அருமையாக அதே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications











