திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பமான நடிகை வித்யா பிரதீப்.. பேபி பம்ப் போட்டோஷூட் வேறலெவல்!
சென்னை: அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வித்யா பிரதீப் தனது பேபி பம்ப் போட்டோஷூட்டை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருப்பார் வித்யா பிரதீப்.
சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்த வித்யா பிரதீப்புக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு திருமணம் ஆனதே பலருக்கும் தெரியாது. ஏனென்றால் 13 ஆண்டுகளுக்கு முன்பே புகைப்படக் கலைஞர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

வித்யா பிரதீப் என்றதும் பிரதீப் இவரது அப்பா என பலரும் நினைத்து இருப்பார்கள். ஏகப்பட்ட நகைக்கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமான வித்யா பிரதீப் எப்போதும் இளமை மாறாமல் இருப்பதால் இவருக்குத் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆனது கூட ரசிகர்களுக்கு ஆச்சர்யமான ஒன்றுதான்.

பல படங்களில்: 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அவள் பெயர் தமிழரசி படத்தில் அறிமுகமான வித்யா பிரதீப் விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம், சித்திரை செவ்வானம், செல்ஃபி, பவுடர், எண்ணித் துணிக, இன்ஃபினிட்டி, எக்கோ, ஸ்ட்ரைக்கர் மற்றும் இந்த ஆண்டு சதீஷ் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் படம் வரை பல படங்களில் நடித்துள்ளார்.

வித்யா பிரதீப் கர்ப்பம்: பிரதீப் என்பவரை திருமணம் செய்து 13 ஆண்டுகளாக காதல் வாழ்க்கை நடத்தி வந்த இருவரும் தற்போது பெற்றோர்களாக போகின்றனர். நடிகை வித்யா பிரதீப் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை தற்போது தனது கர்ப்ப வயிற்றை வெளிக்காட்டி காதல் கணவருடன் கட்டியணைத்து எடுத்துக் கொண்ட பேபி பம்ப் போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வெள்ளை நிற தேவதை: மைக்கேல் பிரதீப் எனும் புகைப்படக் கலைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட வித்யா பிரதீப் சமீபத்தில் தனது கணவர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போட்டோக்களை வெளியிட்டு திருமணமாகி 13 ஆண்டுகள் என அன்பு முத்தங்களை பொழிந்திருந்தார். இந்நிலையில், தற்போது வெள்ளை நிற கவுன் அணிந்துக் கொண்டு கர்ப்ப வயிற்றைக் காட்டி தேவதை போல இருக்கும் அழகுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வித்யா பிரதீப் வெளியிட்டுள்ளார். சீக்கிரமே சுக பிரசவம் ஆகட்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











