Nayagi Serial: பந்து மண்டையில் பட்டு நினைவு போச்சு.. அட கல்லு பட்டதும் வந்துருச்சு!

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் திருமுருகனுக்கு ஒரு பந்து மண்டையில் பட்டு கடந்த ஐந்து வருடங்கள் நினைவு மட்டும் மறந்து போகுது . இதனால், கட்டின மனைவி ஆனந்தியை சுத்தமா மறந்து போறார்.

இந்த நேரத்தில்தான் திருவின் அப்பா,அவரின் நண்பர் துரை அரசன் இவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து,துரை அரசன் மகள் அனன்யாவின் ஆசையை நிறைவேற்ற அவளைத் திருவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகள் நடக்குது.

மணமக்கள் உட்கார்ந்து இருக்கும்போது, சற்குணம் அம்மாவின் கணவரும், கண்மணியின் அப்பா சிகாமணியும் சேர்ந்து எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு காமெடியா பிளான் பண்றாங்க.

 ஆனந்தி திருமுருகன்

ஆனந்தி திருமுருகன்

ஆனந்தி ஏழை வீட்டுப்பொண்ணுதான் என்றாலும் திருமுருகன் வீட்டில் வீட்டு வேலை செய்துகொண்டு இருக்கும்போது, அவளுடன் காதல் வந்துருது திருமுருகனுக்கு. ஆனால், அப்பா கலிவரதனின் நண்பர் துரைஅரசன் மகள் அனன்யா திருவின் மேல் பைத்தியமாக இருக்கா.அவளை கல்யாணம் செய்து வைக்க வீட்டில் கலிவரதன் எல்லாரையும் ஏமாற்றி ஏற்பாடு செய்யறார். இருந்தாலும்,ஆனந்தி, திருவோட கல்யாணம் நல்லபடியா நடந்துருது.

பிறக்கும் வாரிசு

பிறக்கும் வாரிசு

திருமுருகனுக்கும் ஆனந்திக்கும் பிறக்கும் குழந்தையால் கலிவரதன் உயிருக்கு ஆபத்து என்று குருஜி சொல்லி இருப்பதால் பயந்து அவர், இருவருக்கும் நடக்க இருக்கும் சாந்தி முகூர்த்தத்தை தடுத்து நிறுத்தப் பார்க்கிறார். அதுவும் நல்லபடியாக நடந்து முடிஞ்சுருது.

ஆனந்திதான் வாரிசு

ஆனந்திதான் வாரிசு

ஆனந்திதான் தனது அப்பா உரிமை கொண்டாடும் சொத்துக்களுக்கு உண்மையான வாரிசுன்னு திருவுக்கு தெரிஞ்சு இதை ஆனந்திகிட்ட சொல்ல ஆசையோடு போறான்.அப்போ ஆனந்தியின் தம்பி கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கறான்.அந்த கிரவுண்டுக்கு திரு ஆனந்தியை பார்க்கப் போனபோது, ஆனந்திக்கு கலிவரதன் வச்ச குறிப் பந்து, திருவின் மண்டையில் பட்டு,அவனுக்கு கடந்த 5 வருட நினைவுகள் சுத்தமா மறந்து போகுது.

ஆனந்தி கல்யாணம்

ஆனந்தி கல்யாணம்

ஆனந்தியை மறந்தான், கல்யாணத்தை மறந்தான்.. இப்படி கடந்த ஐந்து வருட நினைவுகளை மறந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திகிட்டு, மறுபடியும் திருவுக்கும், அனன்யாவுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்குது. இதை ஆதாரத்துடன் தடுத்து நிறுத்த போனாலும் முடியலை.இந்த நேரத்தில்தான் சற்குணம் கணவர் கூத்த பெருமாள் ஒரு ஐடியாவை சிகாமணிகிட்ட சொல்றார்.

கூத்த பெருமாள் சிகாமணி

கூத்த பெருமாள் சிகாமணி

சின்ன வயசுலே நீ மாங்காய் அடிச்சு இருக்கியாடான்னு கேட்கறார்.இல்லை மாம்ஸுன்னு இவன் சொல்ல, வாடா..மாங்காய் குறி வச்சு அடிக்கறதுல உன் மாமன் கில்லாடின்னு சொல்லிட்டு, திருவும் ,அனன்யாவும் உட்கார்ந்து இருக்கும் மணமேடைக்கு எதிரில் ரொம்பத் தொலைவில் இருந்து மாங்காய் அடிப்பது போல குறி வைத்து ஒரு கல்லை எறிகிறார்.

திருவின் நெத்தியில் கல்

திருவின் நெத்தியில் கல்

அந்த கல்லு சரியா போயி திருவின் நெத்தியில் விழுது. பிறகென்ன கல்யாணம் நின்னு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கறாங்க. உயிருக்கு ஆபத்தில்லைன்னு டாக்டர் சொல்லிடறாங்க. எப்போ திரு கண் விழிப்பான்னு எல்லாரும் காத்திருக்க அனன்யா பிளான் போட்டு எல்லாரையும் வெளியில் அனுப்பிடறா.

கல்லு பட்டு

கல்லு பட்டு

மண்டையில் பந்து பட்டு போன நினைவு, கல்லு பட்டு திரும்பிருது. அதுவும் இப்போது திருவை ஏமாற்றி செய்த கல்யாண ஏற்பாடுகள் வரை. எழுந்து கத்தறான். ஆனால், ரொம்ப கூலா ஆனந்தியை கடத்திட்டேன். நீ நான் சொல்றபடி இன்னும் நினைவு வராத மாதிரி நடிச்சு என்னை கல்யாணம் செய்துக்கணும்னு திருவுக்கு ஆர்டர் போடறா அனன்யா.

ஒரு தப்பு செய்ய ஆரம்பிச்சுட்டா இப்படித்தான் போல...தப்பு மேல தப்பா செய்ய சொல்லுமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X