வாணி ராணியில் நீலிமா ராணி

By Mayura Akilan

ராதிகாவின் வாணி ராணி தொடரில் நீலிமா ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான முன்னோட்ட காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.

பூமிநாதன் சாமிநாதனை மணந்த அக்கா தங்கைகள் வாணி, ராணி. இருவருக்கும் திருமண வயதில் குழந்தைகள் இருக்கின்றனர். வாணிக்கு சூர்யா, கவுதம், என்ற இரண்டு மகன்களும், ராணிக்கு சரவணன் என்ற மகனும், செல்வி, தேனு என்ற பெண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

செல்விக்கு காதல் திருமணமாகிவிட்டது. கவுதமை கதிரின் மகள் பூஜா விரட்டி விரட்டி காதலிக்க அவனோ காதலுக்கு சம்மதிக்கவில்லை. அந்த ஆத்திரத்தில் தேனுவை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுகிறான் கதிர்.

பூஜாவின் அதிரடி

பூஜாவின் அதிரடி

தேனுவை தனது பெரியப்பா கடத்தியதைத் தாங்காத பூஜா, தற்கொலை செய்து கொள்வதற்காக மொட்டை மாடியில் இருந்து குதித்து விடுகிறாள். காயமடைந்த பூஜா தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு போகின்றனர்.

அதிர்ச்சியடைந்த தேனு

அதிர்ச்சியடைந்த தேனு

இதைப் பார்த்த தேனுவிற்கு பேச்சு வராமல் போய்விடுகிறது. இது ராணிக்கும், கவுதமுக்கும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விசயம் சாமிநாதனுக்கும், வாணி குடும்பத்தினருக்கு தெரியாது.

சூர்யாவிற்கு பெண்

சூர்யாவிற்கு பெண்

வாணியின் மகன் சூர்யாவிற்கு பெண் பார்க்கப் போகின்றனர். அந்தப் பெண் ராதிகாவின் தொடரில் தவறாமல் இடம்பெறும் நீலிமா ராணி.

அழகான நீலிமா

அழகான நீலிமா

செல்லமே தொடரில் நடித்த நீலிமா சின்னத்திரைக்கு சின்னதாய் ஒரு பிரேக் விட்டிருந்தார். அதற்குக் காரணம் சினிமா வாய்ப்புதான். தற்போது வாணி ராணிக்காக மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.

வாணியின் மருமகள்

வாணியின் மருமகள்

வாணியின் மருமகளாக வரும் நீலிமா ராணி, சூர்யாவிற்கு ஏற்ற மனைவியாக இருப்பாளா? பூமிநாதனின் கிரானைட் நிறுவனம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா? தற்கொலை முயற்சி செய்த பூஜாவின் நிலை என்ன? கவுதம், பூஜாவை திருமணம் செய்து கொள்வானா? போன்ற பல கேள்விகளுக்கு இனிவரும் எபிசோடில் பதில் கிடைக்கும் என்கிறார் வாணி ராணியின் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X