சீரியலில் எனக்கு நல்ல பெயர் கிடைச்சிருக்கு… நீனு கார்த்திகா
மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை நீனு கார்த்திகா. ஒரு சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார் எதுவுமே செட் ஆகவில்லை அதனால் கவலைப்படாமல் டிவி சீரியலில் நடிக்க வந்து விட்டார்.
மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆகமுடியவில்லை என்று வருத்தப்படும் நீனு கார்த்திகா, தற்போது மூன்று படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் வைதேகி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நீனு கார்த்திகா தொடர்ந்து சினிமாவா? சீரியலா? என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்வார்கள் என்கிறார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்
மோகன்லாலுடன் ரெட் சில்லி படத்துல நடிச்சதன் மூலம் ஒரே படத்துல அங்க பாப்புலராயிட்டேன். பேசாம அங்கேயே இருந்திருக்கலாம்.

தமிழ் செட் ஆகலையே
தமிழ் படங்கள்ல நடிக்கலாமுன்னு இங்கே வந்தேன். இங்கு நடிச்ச படங்கள் எதுவும் எனக்கு சரியா அமையல. திரும்ப அங்கே போகவும் விருப்பம் இல்லை.

சீரியல் வாய்ப்பு
அதான் ரெண்டு பக்கமும் இல்லாம டி.வி.பக்கம் வந்துட்டேன். இப்போ மனசுக்கு நிறைவா இருக்கு. வைதேகி சீரியல் நல்ல பெயரை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறது. நிறைய சீரியல்கள் வாய்ப்பு வருது. ஆனாலும் ஒரே நேரத்தில் ஒரே சீரியல் என்ற பாலிசியோட இருக்கேன்.

மீண்டும் சினிமா
இப்பவும் நான் நடித்த சுராங்கனி, குற்றாலம், உள்ளம் உள்ளவரை படங்கள் ரிலீசாக வேண்டியிருக்கு. இந்த படங்கள்ல ஒண்ணு ஹிட்டானாலும் திரும்பவும் சினிமாவுக்கு போக சான்ஸ் இருக்கு. இப்போ சீரியல் நடிப்பை பார்த்து நிறைய சினிமா சான்சும் வருது. நான் நடிச்ச படங்கள் ரிலீசாகட்டும் அப்புறம் பார்க்கலாமுன்னு சொல்லிட்டேன். அடுத்தும் டி.வியா, சினிமாவான்னு முடிவு பண்ணப்போறவங்க ரசிகர்கள்தான் என்கிறார் நீனு.


Click it and Unblock the Notifications











