பெண்ணை பெத்து வளர்த்து படிக்க வச்சு நீட் தேர்வுக்கு அனுப்பினா...இப்படியாடா?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மை மகள் காவ்யாவை நீட் தேர்வுக்கு அனுப்பி வச்சா என்ன நடக்குது பாருங்க..
அழகம்மை மகள் காவ்யாவை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்பது குடும்பத்தினர் ஆசை.
காவ்யா வீட்டுக்கு கடைக்குட்டி பொண்ணு வேற.. ரொம்ப செல்லம்...நல்லா படிக்கற பொண்ணு வேற.

மதன் காவ்யா
காவ்யாவை வக்கீல் சகுந்தலா தேவியின் மகன் மதன் துரத்தி துரத்தி காதலிக்கறான். ஒரு கட்டத்தில் காவ்யாவும் மதனை உயிருக்கு உயிராய் காதலிக்கவும் ஆரம்பிச்சுட்டறா. மதன் வீட்டுக்குத் தெரியாம காவ்யாவை கல்யாணம் செய்துக்கவும் துணிஞ்சுடறான்.

ஏமாத்திடறாங்க
சகுந்தலா தேவி தன் மகன் மதனிடம், உனக்கும் காவ்யாவுக்குமே நான் நல்ல நாள் பார்த்து கல்யாணம் செய்து வைக்கறேன்னு ஏமாத்தி நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திடறாங்க. கடைசியில மதனுக்கு வேற ஒரு பொண்ணையும் பார்த்துடறாங்க.

நீட் தேர்வுக்கு
காவ்யாவை அழகம்மை குடும்பத்தினர் தேத்தி கெரியர்தான் முக்கியம்னு நீட் தேர்வுக்கு படின்னு சொல்றாங்க. அவளும் படிக்க ஆரம்பிச்சு தேர்வுக்கும் போயாச்சு.

நண்பர்கள்
மதனுக்கு பைக்கில் போகும்போது விபத்து ஆகிடுது. உடனே இந்த நண்பர்கள் இருக்காங்களே அவனுங்க நீட் ஹாலுக்கு உள்ளே போறதுக்கு முன்னால காவ்யாவுக்கு போன் பண்ணி மதனுக்கு ஆக்சிடென்ட்ன்னு சொல்ல, எனக்கு எக்ஸாம்க்கு டைமாச்சுன்னு காவ்யா சொல்லியும் விடலை.மதனுக்கு சீரியஸா இருக்குன்னு சொல்றானுங்க.

தேர்வை எழுதாம
காவ்யா நீட் தேர்வை எழுதாம ஆஸ்பத்திரிக்கு ஓடி வர்றா.நீட் போனா என்னாறது.. குடும்பமே நம்மை எதிர்பார்த்துக்கிட்டு இருப்பங்ககளே.. எக்ஸாம் இடத்துக்கு அண்ணன்தான் கொண்டுவந்து விட்டான்.. இப்படி எழுதாம போறோமேன்னு அறிவு வேணாம் இந்த புள்ளைக்கு. மதனை பார்க்க ஆட்டோ புடிச்சு ஓடறா.
பசங்களும் சரியில்லை...பொண்ணுங்களும் சரியில்லை...


Click it and Unblock the Notifications











