நீயா நானா.. பெயிட் ரிவ்யூஸ் இல்லை.. பிரசாந்த் தான் அதிகமா காசு வாங்குறவரு.. மாட்டிக்கினாரு அபிஷேக்!
சென்னை: சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் விமர்சகராகவே சந்தானம் நடித்திருப்பார். படங்களுக்கு தவறான விமர்சனங்களை சொல்லும் விமர்சகர்களை செல்வராகவன் பேய் கதாபாத்திரத்தில் நடித்து தியேட்டருக்கு அழைத்து வந்து குடும்பத்துடன் கொல்வதாகவும், அதிலிருந்து சந்தானம் எப்படி தப்பித்தார் என்பதும் கதையாக இருந்தது.
"பார்க்கிங் காசு கோயிந்தா, பாப் கார்ன் காசு கோயிந்தா" என அந்த படத்திற்காக உருவாக்கப்பட்டிருந்த அறிமுக பாடலுக்கு பவன் கல்யாண் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து 100 கோடி வரை மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்த நிலையில், அந்த பாடலே கடைசியில் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.

மேலும், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை பார்த்த பலரும் அந்த படத்தையும் கடுமையாக விமர்சிக்க படம் பெரிதாக ஓடவில்லை. அதனை தொடர்ந்து விமர்சகர்கள் vs சினிமா இயக்குநர்கள் நீயா நானா நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், தக் லைஃப் திரைப்படம் வெளியாகி தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த வாரத்தில் சரியாக விஜய் டிவி ஒளிபரப்பி உள்ளனர். அதில், ஓபன் பண்ணா யூடியூப் சேனல் மூலம் விமர்சனங்களை கூறி வந்த சினிமா பையன் மற்றும் இட்டிஸ் பிரசாந்த் உள்ளிட்டோர் பேசியதும் அவர்கள் வசமாக சிக்கியதும் தீயாக பரவி வருகிறது.
பெயிட் ரிவ்யூஸ் இல்லை: சினிமா விமர்சனங்களால் புதிய படங்கள் ஓடாமல் போகிறது என்றும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் படங்களை கடுமையாக விமர்சித்து வருவதால் சினிமா பிரபலங்களுக்கும் விமர்ச்கர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டைகளும் சமூக வலைதளங்களில் நடந்து வருவதை பார்த்து வருகிறோம். ஒரு சில யூடியூப் விமர்சகர்களை ஆஃப் செய்யவும் பாசிட்டிவ் விமர்சனங்கள் போட சிலருக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் திரை மறைவாக பணம் கொடுப்பதும் நடப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பெயிட் ரிவ்யூஸ் என்கிற கான்சப்ட்டே இல்லை என பிக் பாஸ் பிரபலமும் சினிமா பையன் என அழைக்கப்படும் விமர்சகர் அபிஷேக் ராஜா பேசியுள்ளார்.
பிரசாந்த் தான் அதிகம் வாங்குறாரு: பெயிட் ரிவ்யூ என்கிற கான்சப்ட்டே இல்லை என சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த பிரசாந்த் ரங்கசாமியை போட்டுக் கொடுக்கும் விதமாக இவர் தான் இந்தியாவிலேயே highest paid reviewer எனும் அபிஷேக் ராஜா பேசியிருப்பது தான் தற்போது வைரலாகி வருகிறது. அவர்கள் பக்கம் இருக்கும் விமர்சகர்களே, சில பெரிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விமர்சனத்துக்கு பணம் கொடுக்கிறார்கள் என்றும் பேசி, விமர்சகர்கள் சிலர் பணம் வாங்கிக் கொண்டு விமர்சித்து வருவது உண்மை தான் என்றும் கூறியுள்ளனர்.
தீபா அக்கா சரவெடி: எதிர் தரப்பில் அமர்ந்துக் கொண்டு சினிமா விமர்சகர்களை தீபா என்பவர் கேள்விகளாக் துளைத்து எடுத்ததையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சில நடிகர்களை உங்களுடைய விமர்சனங்களில் அதிகம் புகழ்ந்து பாராட்டுவது ஏன் என பிரசாந்த் ரங்கசாமியை டார்கெட் செய்து கேட்க, அது உண்மை தான். இனிமேல், அதை குறைத்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த வாரம் வெளியான தக் லைஃப் படத்தை பாராட்டி பேசாமல், ராஜ்கமல் நிறுவன நண்பர்கள் எதிரிகள் ஆனாலும், பரவாயில்லை, படம் இப்படித்தான் உள்ளது என பேசியிருந்தார் பிரசாந்த் ரங்கசாமி.


Click it and Unblock the Notifications











