ஓட்டுப்போடுவது எப்படி? நீயா நானாவில் டெமோ காட்டிய கோபிநாத்
படித்தவர்களும், பணக்காரர்களும்தான் ஓட்டுப்போட தயக்கம் காட்டுகின்றனர் என்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் தெரிவித்தனர்.
மின்னணு இயந்திரத்தில் ஓட்டுப்போடுவது மிகப்பெரிய சிரமம் படிக்காதவர்கள், பாமரர்கள் அதை புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்தும் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது.
என்னதான் படித்திருந்தாலும் கணவனோ, தந்தையோ சொன்னால் அவர்களுக்கே என் ஒட்டு என்று கூறினார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு தரப்பு பெண்கள்.

அரசியல் பிடிக்காது
படித்த, உயர்பதவியில் இருக்கும் பெண்களே தனக்கு அரசியல் பிடிக்காது என்ற ரீதியில் பேசினார்கள்.
எனக்கு என் குடும்பம் முக்கியம்... அதனால் அரசியல் பிடிக்காது என்று கூறியதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அழகை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. எனவே அரசியல் பற்றி கண்டு கொள்வதில்லை என்றார் மற்றொரு பெண்.

தேவையே இல்லை
யாரோ என்னமோ பண்றாங்க... அரசியல் பேசி என்ன ஆகப்போகுது என்று கேட்டார் ஒரு பெண். இதனால் நேரம்தான் விரயம் என்று கேட்டார் ஒரு பெண்.

திருவிழா காலம்தான்
அதேசமயம் அரசியலை திருவிழா போல பார்க்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதை உற்சாகமாக கவனிக்கிறோம் என்று பேசினர் ஒருசாரார்.

ஓட்டு போடுவது எப்படி?
நிகழ்ச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தில் வாக்களிப்பது எவ்வாறு என்று நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

எளிதான முறைதானே
வாக்குப்போடுவது எளிதான முறைதானே? என்று கேட்ட கோபிநாத், புதிதாக மத்திய சென்னை தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரிண்ட் அவுட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் டெமோ செய்து காண்பிக்க வைத்தார்.

படித்தவர்களும், பணக்காரர்களும்
கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், வாக்களிக்கும் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் சென்னைப் போன்ற பெருநகரங்களில், பணக்காரர்களும், படித்தவர்களும் உள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேர்தல் அதிகாரிகள்.

எஸ்.எம்.எஸ் அனுப்புங்க
வாக்காளர்கள், 9444123456 என்ற செல்போன் எண்ணிற்கு, epic என ஆங்கிலத்தில் டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு, உங்களுடைய வாக்காளர் அட்டையாள அட்டை எண்ணையும் டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உடனடியாக உங்களுடைய செல்போன் எண்ணிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம் குறித்து முழு விவரமும் எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்க பெறும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

தேர்தல் நேரத்தில்
லோக்சபா தேர்தல் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில்... வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றிய செயல்முறை விளக்கம், அரசியலில் பெண்களின் பங்கு பற்றி கூறியது பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது.


Click it and Unblock the Notifications











