தமிழ்நாடு ..முதலமைச்சர்.. நிம்மதி...! அப்பா எனக்கு ஏன் இந்த பெயர் வச்சீங்க?!

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் சொல்லவே வெட்கப்படும் மாதிரியான பெயர் கொண்ட பிள்ளைகள். அப்பா எதுக்கு இந்த பேரை வச்சார் என்று பதில் சொல்ல கலந்துக்கொண்ட தாய் தந்தையர் என்று நிகழ்ச்சி களைக்கட்டுகிறது. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் நிறைய புதுப்புது பெயர்கள் கூறினார்கள்.

நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் வியந்து போகும் அளவுக்கு பெயர்கள் இருக்கின்றன. இந்த பெயர்களைக் கொண்டவர்கள், தங்களது பெயரை வெளியில் சொல்லும்போது என்னென்ன அவமானம், கஷ்டங்கள் எல்லாம் பட்டார்கள் என்றும் விவரிக்கின்றனர்.

ஏங்க... பெயர் வைக்கும்போது பார்த்து வைக்க வேணாமா என்று அங்கலாய்க்கும்படி பெயர்கள் இருந்தாலும், அதற்கு காரணம் கூறும் பெற்றோர், மற்றும் வல்லுநர்கள் என்று நிகழ்ச்சி படு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ஞாயிறு மதியம் விஜய் டிவியை பார்த்தால் இது பற்றி இன்னும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்கலாம்.

 முதலமைச்சர் தமிழ்நாடு

முதலமைச்சர் தமிழ்நாடு

கோபிநாத் உங்களுக்கு என்ன பெயர்.. எதனால் இந்த பெயர் பிடிக்கலை என்று வரிசையாக கேட்டுக்கொண்டே வந்தார். ஒரு பெண் என் பேர் நிம்மதி சார் என்று சொன்னார். நிம்மதின்னு ஒரு பேராம்மா என்று கேட்க, ஆமாம் என்றார் அந்த பெண். அடுத்து உங்க பேர் என்ன என்று ஒருவரிடம் கேட்க, தமிழ்நாடு என்கிறார் ஒருவர், முதலமைச்சர் என்கிறார் இன்னொருவர். என்னங்க முதலமைச்சர் என்பது ஒரு பதவி இதையா பேரா வைப்பாங்க என்று கோபிநாத் கேட்க, ராஜா என்று பெயர் வைக்கிறார்கள் அது மட்டும் என்ன... நாட்டை ஆள்பவன் ராஜா. அது மட்டும் சரியா என்று திருப்பி கேட்டார் முதலமைச்சர்.

 கவாஸ்கர் கபில்தேவ்

கவாஸ்கர் கபில்தேவ்

இரட்டையர்களை கபில்தேவ், கவாஸ்கர் என்று ஒரு அப்பா பெயர் வைத்து இருக்கார்.ஒரு பெண்ணுக்கு சுதா என்கிற பெயர் சப்புன்னு இருக்குதாம். இன்னொருத்தர் தனது பெயர் பரலோகம் என்று சொன்னார். யாராவது கேட்டால் பரலோகம் என்றுதான் சொல்வாராம். இன்னொரு நபர் தனது பெயர் சடையாண்டி என்று சொன்னார்.நிம்மதி என்று பெயர் வைத்த பெண், மதி, நிம்மி என்று வெளியில் பெயர் கொடுத்துக்கொள்வாராம். சடையாண்டியும், பரலோகமும் கூட தங்களது பெயரை மாற்றிக் கொள்வார்களாம். சடையாண்டி அஜீத், விஜய் என்று பெயரை இடத்துக்கு ஏற்ப மாற்றிக் கூறிவிடுவாராம்.

 வச்சது ஒண்ணு கூப்பிடறது ஒண்ணு

வச்சது ஒண்ணு கூப்பிடறது ஒண்ணு

சில பேர் வீட்டில் வச்ச பேர் ஒண்ணா இருக்கும், வேற பேர் சொல்லி கூப்பிட்டுக்கிட்டு இருப்பாங்க. இதற்கும் பதில் தந்து இருக்காங்க பெற்றோர். ஒரு மகள் எனக்கு மோகன பிரியான்னு நல்ல பேர் இருக்கும்போது சுதான்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க என்று தனது அம்மாவிடம் கேட்டார். அவங்க அம்மா கூறுகையில், என் ஹவுஸ் ஓனர் பையன் ஒரு பெண்ணை காதலிச்சான் சார். அந்த பொண்ணு பேரு சுதா. அதனால், இவள் பிறந்த உடனே சுதான்னு சொல்லிட்டான் என்று சொன்னார் அம்மா. அது மட்டும் இல்லாமல் பிரியான்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த கணவர், சுதா சுதான்னு கோவம் வந்தா கூப்பிடும்போது சுதாவுக்கு கோவம்னு அர்த்தமோன்னு எனக்கு கடுப்ப வருது சார் என்று சொன்னார் அந்த பெண்.

 ஈவென்ட்டுக்கு கூப்பிட மாட்டாங்க

ஈவென்ட்டுக்கு கூப்பிட மாட்டாங்க

பரலோகம்னு பேர் வச்சுட்டாங்க சார், ஒரு ஈவென்ட்டுக்கு கூப்பிட மாட்டாங்க சார். பரலோகம்னு நான் சொன்னால், முகத்தை சுளிச்சுகிட்டு போயிருவாங்க சார் என்று சொன்ன பரலோகம் தனது பெயரை சுருக்கி பல்சி தர்மம்னு வச்சுகிட்டாராம். தர்மம் அப்பா பேரு சார் என்று சொன்னார். அப்பாவுக்கு கூட அவங்கப்பா நல்ல பேர் வச்சு இருக்காங்க பாருங்க. இவருக்கு எதுக்கு பரலோகம்னு அவங்கப்பா பேர் வச்சார்?

 சடையாண்டி கோயிலுக்கு நேந்துகிட்டேன்

சடையாண்டி கோயிலுக்கு நேந்துகிட்டேன்

கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் குழந்தை இல்லை சார். வீட்டில் என் பொண்டாட்டியை குழந்தை இல்லேன்னு சொல்லி பொறந்த வீட்டுக்கு போயிடுன்னு சொன்னங்க. எங்களுக்குள்ள ஒரு சண்டையும் இல்லை.. எத்தனையோ சாமிகிட்ட வேண்டிகிட்டேன்.. சடையாண்டி கோயிலுக்கு எதாவது ஒரு பிள்ளையைக் குடுன்னு வேண்டிகிட்டேன். இவன் உடனே உண்டாகி பிறந்தான். அதனால் சடையாண்டின்னு பேர் வச்சேன். நாங்க படிக்கலை, ஆனால், இவனை காலேஜுக்கு படிக்க வச்சேன். இதெல்லாம் தந்தது சடையாண்டி சாமிதான்..இதை புரிஞ்சுக்காம இருந்தா எப்படி. கேட்கறவங்களுக்கு நீதான் பதில் சொல்லணும் என்று நெகிழ்ந்த அப்பா அழுதே விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X