மன அழுத்தத்திற்கு என்ன மருந்து?: 'நீயா நானாவில்' சூடான விவாதம்…

By Mayura Akilan

Neeya Naana
உயர்ந்து கொண்டே போகும் நகை விலை பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு அச்சத்தையும் மனஅழுத்தத்தை தருகிறது. 20 ஆண்டுகள் பார்த்த வேலை போன உடன் வேறு வேலை கிடைக்கவில்லையே என்பது ஆணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு உலகம் முழுவதும் ஸ்ட்ரெஸ் எனப்படும் உளரீதியான நோயில் சிக்கி உழன்று வருகின்றனர். இந்த மனஉளைச்சல் இதயநோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாக காரணமாகிவிடுகிறது.

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மனஉளைச்சலில் சிக்கித் தவிக்கும் இன்றைய சூழலில் மனஅழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதைப்பற்றியும், அதைத்தீர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் விவாதித்தனர்.

உளவியல் சிக்கல்

இந்தியாவில் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். அதற்காக சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை.

எதற்கும் பொறுமை இல்லை. காத்திருப்பதில் கூட கஷ்டம் இருக்கிறது,

எங்கே எதற்காக மனஅழுத்தம் ஏற்படுகிறது என்பது பற்றி நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

பெண்கள் உலகத்தில் எதற்கெல்லாம் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்றும், ஆண்கள் உலகத்தில் எதற்கெல்லாம் மனஅழுத்தம் ஏற்படுகிறது என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

பெண்களின் உலகில் மனஅழுத்தம்

காலையில் அலுவலகம் செல்லும் முன் பரபரப்பாக வேலையை செய்யவேண்டுமே என்பதில் தொடங்குகிறது மனஅழுத்தம். பொருளாதாரா ரீதியாக சிக்கல் எழும்போதும், கடன் சுமை கழுத்தை நெறிக்கும் போதும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. பிறருடன் ஒப்பிடும் போதும், நகை இல்லாமல் இருப்பது, சொந்த வீடு இல்லாதது மனஅழுத்தம் ஏற்பட காரணமாகிறது என்று கூறப்பட்டது.

ஆண்களில் உலகில் மனஅழுத்தம்

வேலை சரியாக அமையாவிட்டால் ஆண்களின் உலகத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. அதேபோல் பார்த்த வேலை போய்விட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மனஅழுத்தத்திற்கு பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனஅழுத்தம் தற்கொலைக்கு கூட தூண்டுகிறது என்று கூறினார் ஒருவர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மற்றொருவர், வரவுக்குத் தகுந்த செலவு இருந்தால் போதும் மனஅழுத்தம் ஏற்படாது. நல்லா இருக்கும் போது சிம்பிளாக இருந்தால் ஏற்றத்தாழ்வுகளை சரிசமமாக பார்க்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.

தங்கம் என்பது மனச்சுமை

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தனர் காசி சிவக்குமார்,

தேவையில்லாத பொருட்களை வாங்குவது மனஅழுத்தம் தருகிறது. நகையைப் பெண்கள் பற்றி நிறைய யோசிக்கின்றனர். பெண்களின் வளையல், கொலுசு இரண்டும் பெண்களுக்கான விலங்கு. இது தெரியாமல் தங்கத்தினால் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்றார். எழுத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லாதது மனஅழுத்தம் தரும். நம்மை இந்த உலகம் ஏற்றுக்கொள்ளவில்லையே என்பது மனவலி. மூர்ச்சையாகப்போகிறது. கவிஞனால் ஜெயிக்க முடியவில்லையே என்ற வலி இலக்கியவாதிகளுக்கு அதிகம் என்றும் கூறினார் காசி. சிவகுமார்.

வரவுக்கு தகுந்த செலவு

உங்களுக்கு கடன் இருக்கும் போது நீங்கள் ஏன் 3 லட்சம் செலவு செய்யவேண்டும் என்று கேள்வி எழுப்பினார் மற்றொரு கவிஞர் வெண்ணிலா. நம்முடைய தகுதிக்கு தகுந்த பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ சேர்த்தால் இந்த மனஅழுத்தத்தினை தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.

மனஅழுத்தம் போக்கும் அழுகை

மனஅழுத்தத்திற்குக் காரணம் உணர்வுகளை கட்டுப்படுத்துவதுதான். அழுகை என்பது ஒரு வடிகால். அழுதுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படாது என்றார் மனநல ஆலோசகர். பிறரின் சிரமங்களைப் பார்த்தால் போதும் பேராசையும் வராது, நமக்கு துன்பங்களும் வராது. நம்முடைய உணர்களை சொல்லாமல் இருப்பதுதான் மனஅழுத்தத்தை தருகிறது என்றும் கூறினார்.

குடும்பம்தான் சிக்கல்களுக்குக் காரணம். அதே குடும்பம்தான் சிக்கல்களை தீர்க்கிறது என்றார் ஞாநி. நம்முடன் இருப்பவர்கள் நம்மை புரிந்து கொண்டவர்களாக இருந்தால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினார்.

கடனால் மனஅழுத்தம்

சமூகம் உடைந்து போய் இருக்கிறது. சிலரால் மட்டுமே சிறப்பாக வாழ முடிகிறது. பலரால் வாழவே முடியவில்லை. இதனாலேயே பலருக்கும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. நகையை ஆசை ஆசையாய் வாங்கி அதை போட்டுப் பார்க்க முடியாமல் அது அடகு வைத்திருக்கும் அது மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. கடன் சுமை மனஅழுத்தம் தருகிறது. கடன் சுமை என்பது கேன்சரை விட மோசமானது என்று கூறினார் ஒருவர்.

சமூகத்தின் டிமான்டுகளால்தான் மனஅழுத்தம் ஏற்படுகிறது. எனவே நமக்குக் கிடைத்ததை வைத்து வாழ்க்கையை நகர்த்தினால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று நீயா நானாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X