ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கிட்டு ஓசி டிக்கெட் ஏன்?.. ரயில்வே ஊழியரை விளாசிய ’நீயா நானா’ கோபிநாத்!

சென்னை: அரசியல்வாதிகள் இலவச அறிவிப்புகளை ஏன் கொடுக்க வேண்டும் என்றும் மக்களின் வாழ்வாதாரத்தை அவர்கள் மேம்படுத்தத்தானே வேண்டும் என ரயில்வே ஊழியர் கொந்தளித்துப் பேசிய நிலையில், அவரை ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்தமாக க்ளீன் போல்டு செய்து நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத் பேசியதை பார்த்த ரசிகர்கள் புதிய புரோமோவுக்கு ஃபயர் விட்டு வருகின்றனர்.

பொதுவாகவே சிலருக்கு இலவசங்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்படுவது குறித்த கேள்விகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கோடிக் கணக்கில் சம்பாதித்தாலும், வரிச்சலுகையை எப்படி பெறலாம். கறுப்பு பணத்தை எப்படி பதுக்கலாம் என்கிற புத்தியுடன் தான் அந்த நபர்கள் செயல்பட்டு வருவார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை என அடிக்கடி அவர்களே நிரூபித்து வருகின்றனர்.

Neeya Naana Gobinath roasted Railway Employee for speaking against freebies

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபிநாத் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நீயா நானா நிகழ்ச்சியை பார்க்காமல் பலருக்கு பொழுதே போவது கிடையாது.

விவாத நிகழ்ச்சி: இரு தரப்பு மக்கள் பங்கேற்று இரு விதமான டாப்பிக்குகளை ஏற்றுக் கொண்டு போட்டா போட்டியாக தங்கள் கருத்துக்களை முன் வைத்து வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் கோபிநாத் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார். இந்த வாரத்துக்கான நீயா நானா நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து புதிய விவாதத்தை சமூக வலைதளங்களில் ஆரம்பித்து வைத்திருக்கிறது.

இலவசம் கொடுத்து கெடுக்குறாங்க: மக்களுக்கு அரசியல்வாதிகள் ஏன் இலவச அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இலவசங்களை கொடுத்து கெடுக்குறாங்க என மூச்சை பிடித்துக் கொண்டு ரயில்வேயில் பணியாற்றி விட்டு ரிட்டயரான நபர் பேசிக் கொண்டிருந்தார். பல முறை அவருக்கு புரிய வைக்க கோபிநாத் முயற்சி செய்த போதும் அவர் தொடர்ந்து 10 சதவீதம் பேருக்கு இலவசம் கொடுப்பதால் 99 சதவீதம் பேர் பாதிக்கிறாங்க என சிம்பிள் கணக்கு கூட தெரியாமல் கொதித்துப் போய் பேச ஆரம்பித்து விட்டார்.

அதட்டிய கோபிநாத்: ஒரு கட்டத்தில் இப்படி பிச்சை எடுக்க வைக்கக் கூடாது என எல்லை மீறி அந்த நபர் பேசியதை பார்த்த கோபிநாத், பிச்சை எடுக்கிறாங்க, பிச்சைக்காரங்கன்னு சொல்லக் கூடாது என அவரை டைரக்ட் அட்டாக் செய்ய நீங்க என்ன வேலை பார்க்குறீங்க என கேள்வி எழுப்பி வசமாக சிக்க வைத்தார்.

ஒரு லட்சம் வாங்கிட்டு: ரயில்வேயில் வேலை பார்த்தேன் இப்போ ரிட்டயர்ட்னு அந்த நபர் சொன்ன நிலையில், உங்க சம்பளம் எவ்வளவு என கோபிநாத் கேட்டார். ஒரு லட்சத்துக்கும் மேல் சம்பளம் என்றார். உங்களுக்கு ரயிலில் செல்ல பாஸ் இருக்கா? என்றார். இலவசமாக எங்கே வேண்டுமானாலும் போவேன் என வாய் விட்டு மாட்டிக் கொண்டார் அந்த நபர். ஒரு லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு டிக்கெட் கூட காசு கொடுத்து வாங்க முடியாமல் ஓசியில வாங்குறீங்களேன்னு கோபிநாத் கேட்க, அது பிரிவிலேஜ் (சலுகை) என பந்தா காட்ட ஆரம்பித்த அவரை நாக்கை பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்டு ஆஃப் செய்து விட்டார் கோபிநாத்.

கோபிநாத் ஃபயரு: ஒரு லட்சம் வாங்கிட்டு டிக்கெட் இலவசமாக கொடுத்தா அது சலுகை. 2 கிலோ அரிசியை இலவசமா ஏழை மக்கள் வாங்கினால் அது இலவசமா? என பொளந்துக் கட்டிய நிலையில், ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X