Neeya Naana: பேய் இருக்கா.. இல்லையா?.. சில அறிகுறிகளை வச்சு கண்டுபிடிக்கலாம்.. கலக்கும் நீயா நானா!

சென்னை: நீயா நானாவில் எப்போதுமே இந்த டாபிக்கிற்கு மவுசு அதிகம் தான். ஒரு பக்கம் கருத்து ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்றும் படங்கள் வந்தாலும், அரண்மனை 4 படம் வந்தால் ரசிகர்கள் தியேட்டரில் தமன்னா பேயா மாறினாலும் தாயா என்னம்மா போராடுறாங்க பாருடான்னு கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர்.

அந்நியன் படத்தில் அறிவியல் பூர்வமாக ஷங்கர் அணுகிய அதே விஷயத்தை சந்திரமுகி படத்தில் அறிவியல் பிளஸ் பேய் என குழப்பி அந்த படத்தை 3 ஆண்டுகள் ஓட வைத்தார் பி. வாசு. அவுஜா போர்டு முதல் பேயை கண்டு பிடிக்க பல விஷயங்கள் உள்ளதாக தனியாக டார்க் மார்க்கெட் ஒன்றே செயல்பட்டு வருகிறது.

TV Vijay Tv Neeya Naana Gobinath ghost

நீயா நானாவில் பல முறை இந்த விவாதத்தை நடத்தினாலும் மாமியார் மருமகள் சண்டை போல பேயை நம்புபவர்கள் vs பேயை நம்பாதவர்கள் சண்டை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வாரமும் அப்படியொரு நீயா நானா ஷோ விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதன் அட்டகாசமான புரமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

எல்லாமே எண்டர்டெயின்மென்ட்: மற்ற டிவி சேனல்களை விட விஜய் டிவியில் தான் ரசிகர்கள் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக கூறுகின்றனர். சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களுக்கு அதிக முக்கியத்துவத்தை விஜய் டிவி கொடுத்து வருகிறது. 15 வருடங்களுக்கு மேலாக நீயா நானா நிகழ்ச்சி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனை கோபி இன்னமும் சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களுக்கு வழங்கி வருவதே சிறப்பான விஷயம் தான். நீயா நானாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பல நிகழ்ச்சிகள் இத்தனை வாரங்கள் தாக்கு பிடித்ததா? என்றால் இல்லை என்கிற பதில் தான் பெரும்பாலும் வரும்.

நீயா நானா: இரு தரப்பு மக்களை இரு புறமும் உட்கார வைத்து நடுவில் நின்று பேச ஆரம்பிக்கும் கோபி இரு தரப்பு மக்களையும் விவாதிக்க விட்டு அதில், எது சரி? எது தவறு? யாரை பாராட்டலாம், யாரை டார்கெட் பண்ணி தூக்கலாம் என்பதை நன்றாகவே செய்து வருவதால் ரசிகர்கள் அந்த ஷோவை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

பெல் ஆட்டுனா பேய் இருக்கா?: பேய் இருப்பதாக கண்டுபிடிக்க சில பிளாக் மேஜிக் ஐட்டங்களை வாங்கி வைத்துக் கொண்டு சிலர் பேயை வைத்து ஜாலியாக பிழைப்பை நடத்தி வருகின்றனர். ராகவா லாரன்ஸும் சுந்தர் சியும் பேயை வைத்து படங்களை எடுத்து 100 கோடி வசூலை குவித்து வருவது போல. இந்த வாரம் பெல் ஆட்டுனா பேய் இருக்கா? இல்லையா?ன்னு பேய்க்கான மரியாதையே இல்லாமல் நடத்தப்பட்ட ஷோவின் புரமோ வீடியோ வந்திருக்கிறது. பேய் இருக்குன்னு நம்புறவங்களும் பயந்தது போல தெரியவில்லை. பேய் இல்லைன்னு சொல்றவங்களும் ஜாலியா சிரித்து கலாய்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் இந்த வார நிகழ்ச்சியும் நீயா நானா டீமுக்கு ஒரு ஹிட்டான ஷோவாக அமைந்து விடும் என்று தான் தெரிகிறது. ஹாரர் படம் அளவுக்காவது எஃபெக்ட் கொடுத்து புரோமோ போட்டால் இன்னும் நல்லா இருக்குமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X