''வட்டச் செயலாளர் 'வண்டு' முருகனும், சதுரச் செயலாளர் 'சந்து' முருகனும் அட்டகத்திகளா??''

By Mayura Akilan

ஒரு படத்தில் ஹலோ நான் வட்டச் செயலாளர் வண்டு முருகன் பேசறேன் என்பார் வடிவேலு.

அதற்கு எதிர்பக்கத்தில் இருந்து நான் சதுரச் செயலாளர் சந்து முருகன் பேசறேன் என்று கலாய்ப்பார்கள்.

வட்டச்செயலாளர்தான் இருப்பாங்க சதுரச்செயலாளர் எப்படி இருப்பாங்க என்ற அதிர்ச்சியடைந்த வடிவேலு, எங்க தெருவுல லைட் எரியலை என்று புகார் செய்வார். உடனே எதிர்தரப்பு ஆட்கள் லைட் எரியாவிட்டால் மண்ணெய் வாங்கி ஊத்துனா எரியும் என்று நக்கல் அடிப்பார்கள். வடிவேலு உடன் இருந்த சில கைத்தடிகள் விட்ட உதாரில் வந்து அடித்துவிட்டும் போவார்கள்.

வட்டச்செயலாளர்கள் உண்மையிலேயே அப்பாவிகள் தானா? அல்லது அடாவடிப் பேர்வழிகளா? ஒரு கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி ஐ.டி துறையில் இருப்பவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று இந்த வாரம் நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.

கோட் சூட் போடுங்கப்பா

கோட் சூட் போடுங்கப்பா

வெள்ளை சட்டை, வேஷ்டிதான் அரசியல்வாதிகளின் அடையாளமே. ஆனால் ஜீன்ஸ், டிசர்ட், கோட்சூட் போட்டு வரலாமே என்றனர் இளசுகள். ஒருசிலர், தங்கச் சங்கிலி, மேதிரம் என நகைக்கடையாக வலம் வருவதை விடுத்து எளிமையாக இருக்கலாமே என்றனர்.

ஆனால் வேஷ்டி, சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சரத்தை பிரதிபலிக்கும் உடை என்று ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்தனர்.

பத்து பேர் புடை சூழ

பத்து பேர் புடை சூழ

ஒரு வட்டச் செயலாளரின் பின்னால் எப்போதுமே பத்துபேர் இருப்பார்கள் அது தங்களை பயமுறுத்துவதாக கூறினர். ஆனால் அப்படி ஆட்கள் இருப்பதுதான் வேலைக்கு எளிதானது என்றனர் வட்டச் செயலாளர்கள்.

கட்டப்பஞ்சாயத்து ஏன்?

கட்டப்பஞ்சாயத்து ஏன்?

பெரும்பாலான வட்டச் செயலாளர்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக இருக்கின்றனர் என்றும், கட்டைப் பஞ்சாயத்து செய்கின்றனர் என்றும் புகார் கூறப்பட்டது. இது தவறான கருத்து என்று கூறிய அரசியல்வாதிகள், மக்களுடன் எளிமையாக பழகி ஏழை மக்களின் பிரச்சினைகளை செலவின்றி தீர்த்து வைக்கிறோம் என்றனர்.

தகுதி இருக்கிறதா?

தகுதி இருக்கிறதா?

கஷ்டப்பட்டு படித்து ஐடி வேலை பார்த்து சம்பாதிக்கிறோம். ஆனால் ஒன்றுமே படிக்காமல், கம்யூட்டர் பற்றி கூட தெரியாமல் அதிகாரம் செய்கின்றனர் என்பது ஐ.டி மக்களின் வாதம். ஆனால் அரசியல்வாதிகளுக்கு படிப்பறிவு என்பது இரண்டாம் பட்சம்தான். பாமர மக்களுக்கு உதவி செய்வதற்கு கம்யூட்டர் படித்துவிட்டு வரவேண்டிய அவசியமில்லை என்றனர் அரசியல்வாதிகள்.

ஊழல் செய்கின்றனர்

ஊழல் செய்கின்றனர்

அரசியல்வாதிகள் என்றால் அதிகார துர்பிரயோகம் செய்வார்கள் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால் நாங்கள் அப்படியில்லை. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அடாவடித்தனம், ரவுடித்தனம் செய்வதில்லை என்றனர்.

அதேபோல் பணம் வாங்கிக் கொண்டு செய்வதாக புகார் உள்ளது. பத்து சதவிகித மக்கள் லஞ்சம் வாங்கலாம், ஊழல் செய்யலாம் ஆனால் எல்லோரும் அப்படியில்லை என்றனர் அரசியல்வாதிகள்.

அட்டகத்திகள்

அட்டகத்திகள்

அரசியல்வாதிகள் என்றாலே வேலை வெட்டி இல்லாதவர்கள், அட்டகத்திகள் என்றார் ஒரு இளைஞர், அதற்கு கோபப்பட்ட ஒரு வட்டச் செயலாளர், தான் 19 வயதில் இருந்து சுயமாக தொழில் செய்வதாக கூறினார். நாங்கள் யாரும் அட்டகத்திகள் இல்லை என்றும் கூறினார்.

நிறைய உதவி செய்கிறோம்.

நிறைய உதவி செய்கிறோம்.

முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வாங்கி கொடுக்கிறோம். சேவை செய்கிறோம். பணம் சம்பாதிக்க வருவதில்லை. மக்களிடம் நல்ல பெயர் எடுக்கத்தான் முயற்சி செய்கிறோம் என்றனர்.

ஓட்டுப்போடப் போவதில்லை

ஓட்டுப்போடப் போவதில்லை

ஐ.டி மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை என்று அரசியல்வாதிகள் குற்றம் சாட்டினர். அது உண்மை என்று ஒத்துக் கொண்ட இளைஞர்கள், அதற்குக் காரணம் அரசியல்வாதிகள் மீதான வெறுப்புதான் என்றனர்.

நீங்க வாங்களேன்

நீங்க வாங்களேன்

குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கிறோம் என்ற ஒரு அரசியல்வாதி, ஐ.டி படித்தவர்கள் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட மட்டுமேதான் இருக்கின்றனர். நீங்களும் அரசியலுக்கு வாங்களேன் வந்து சேவை செய்யுங்களேன் என்று அழைத்தார்.

ஊழல் உண்மைதான்

ஊழல் உண்மைதான்

மக்கள் சேவை செய்யும் அரசியல்வாதிகளுக்கு பெரிதாக சம்பளம் எதுவும் கிடைக்காது. ஒருசிலர் தங்களின் கை காசினை போட்டு செலவழித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள்தான் அரசியலில் பதவிக்கு வந்த உடன் ஊழல் செய்கின்றனர் என்றார் சிறப்பு விருந்தினர் செந்தில்நாதன்.

ஊழலை ஊக்குவிப்பது யார்?

ஊழலை ஊக்குவிப்பது யார்?

உடனடியாக ஒரு காரியம் நடக்கவேண்டும் என்றால் ஊழலை ஊக்குவிப்பது ஐ.டி படித்தவர்கள்தான் என்று குற்றம் சாட்டினர் அரசியல்வாதிகள். செய்தியே இன்றைக்கு பணம் கொடுத்து போடக்கூடிய செய்தியாக இருக்கிறது என்றார் கோபிநாத். படித்தவர்களும் ஊழல் செய்கின்றனர் என்பதற்காக ஊழலை நியாயப்படுத்த முடியாது என்றார்.

எதிர்காலம் இளைஞர்கள் கையில்

எதிர்காலம் இளைஞர்கள் கையில்

இனி வருங்காலத்தில் வாக்குகளை ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது எனவே இளைஞர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏதுவாக நகை எல்லாம் இல்லாமல் ஐபாட் சகிதமாக போய் மக்களை சந்தியுங்களேன் என்றார் கோபிநாத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X