Neeya Naana: கோபிநாத் கேட்ட கேள்வி.. பேச முடியாமல் மூச்சு திணறும் “பிரபலம்”.. திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கான இரண்டாவது பிரமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் தன்னுடன் டான்ஸ் ஆட சொல்லும் மனைவிமார்களும் ஆட மறுக்கும் கூச்சப்படும் கணவர்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது.

Neeya Naana show 27th August 2023 promo 2 and fans reaction

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருக்கும் கணவர் ஒருவர் திணறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த வார எபிசோடு குறித்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் ரசிகர்களின் மத்தியில் சலிப்பு தட்டாமல் இருந்து வருகிறது. அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் ஒரு பக்கம் இருந்தாலும் இதில் விவாதிக்கப்படும் தலைப்புகளும் தான். ஒவ்வொரு வாரமும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளின் அடிப்படையிலேயே விவாதங்கள் நடைபெற்று வரும்.

ஆனால் இந்த வாரம் தன்னுடன் டான்ஸ் ஆட சொல்லும் மனைவிமார்கள் ஒரு பக்கமும் ஆட மறுத்து கூச்சப்பட்டும் கணவர்கள் இன்னொரு பக்கம் என்ற மாதிரி விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து அதிகமான ரசிகர்கள் இணையத்தில் திட்டி வருகின்றனர். காரணம் இதுவரைக்கும் கருத்துள்ள பல விவாதங்கள் இருக்கும் அது பலருடைய மனக்குமுறல்களை கொட்டுவது போன்று இருக்கும்.

பல நேரங்களில் உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளும் நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்று இருக்கிறது. ஆனால் இப்போது சுவாரசியத்திற்காக என்டர்டைன்மென்ட் என்கிற பெயரில் இப்படி சரியான அழுத்தம் இல்லாத தலைப்புகளில் விவாதத்தை வைத்து விட்டார்களே? என்று இந்த நிகழ்ச்சியின் தீவிரமான ரசிகர்கள் ப்ரொமோக்கான வீடியோவில் கருத்துக்களை கொட்டுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் கோபிநாத் மனைவிகள் அணியில் இருக்கும் ஒரு பெண்ணிடம், "நீங்க என்ன காரணத்துக்காக டான்ஸ் ஆட உங்க கணவரை கூப்பிடுறிங்க..?" என்று கேள்வி கேட்க, அதற்கு அந்தப் பெண்," ரீல்ஸ் பண்ணுவதற்காக கூப்பிடுவேன். வரமாட்டாங்க. மூணு நிமிஷம், நாலு நிமிஷம் கூட ஆட சொல்லல. சும்மா ஒரு மினிட் போதும்" என்று சொல்ல, அதற்கு கோபிநாத் அந்தப் பெண்ணின் கணவரிடம் சும்மா ஜாலியா தானே இருக்கு, வீட்ல தானே ஆட போறீங்க என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு அந்தக் கணவர் கரெக்ட் தான் சார் என்று சொல்லி அதற்கு மேலே சொல்ல முடியாமல் திணறுகிறார். அதை கோபிநாத் உங்களால இப்போ பேச முடியாம இல்ல, மூச்சு வாங்குது அப்படித்தானே என்று கேட்க, ஆமாம் என்று அந்த நபர் சொல்ல அதைத் தொடர்ந்து ஏன் அவங்களுக்கு ஆடத் தெரியவில்லை என்றாலும் வம்படியா ஆட வைக்கிறீங்க என்று அங்கு இருக்கும் மனைவிமார்களிடம் அடுத்த கேள்வி கேட்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X