Neeya Naana: பிளாட்பாரம் ரேஞ்சில் பேசிய பெண்.. கோபிநாத் கேட்ட நறுக் கேள்வி.. திட்டும் ரசிகர்கள்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் தன்னுடன் டான்ஸ் ஆட சொல்லும் மனைவிமார்களும் எங்களால் ஆட முடியாது என்று கூச்சப்பட்டு மறுக்கும் கணவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

Neeya Naana show 27th August 2023 promo 4 and fans reaction

இந்த நிலையில் தாங்கள் எதனால் மனைவியுடன் டான்ஸ் ஆட முடிவதில்லை என்பதை பற்றி கணவர்கள் சொல்ல, அது குறித்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நீயா நானா நிகழ்ச்சியில் இதுவரைக்கும் அதிகமான எபிசோடுகளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளின் வரிசையில் விவாதங்கள் இருக்கும். அந்த வரிசையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடன் நடனம் ஆட சொல்லும் மனைவிமார்களும் ஆட மறுக்கும் கணவர்மார்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது.

Neeya Naana show 27th August 2023 promo 4 and fans reaction

இந்த வார எபிசோட்டிற்காக 4 ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சி ப்ரோமோ வெளியானதும் கமெண்ட்களும் லைக்குகளும் குவிந்து வரும். ஆனால் தற்போது இந்த வார எபிசோட் அதிகப்படியான நெகட்டிவ் கமெண்ட்கள் இருக்கின்றன. காரணம் இந்த வாரம் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் தலைப்புகளாக இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

ஆனாலும் அதே நேரத்தில் டிவி சேனல்களில் இப்போது அதிகப்படியாக அழுகை காட்சிகள் இடம்பெற்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. ரியாலிட்டி ஷோ என்றால் அங்கே அழுது அனுதாபம் தேடுவது வாடிக்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அதற்கு மாறாக சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Neeya Naana show 27th August 2023 promo 4 and fans reaction

இந்த வாரம் வெளியான ப்ரோமோவில் கோபிநாத் உங்க மனைவி எல்லாரும் டான்ஸ் ஆடுறாங்க, வாங்க நம்மளும் டான்ஸ் ஆடலாம் என்று உங்களை துணைக்கு கூப்பிடற போது எந்த கூச்சம் உங்களை தடுக்கிறது என்று கோபிநாத் கேட்க, அதற்கு கணவர்கள் தரப்பில் இருந்து ஒரு நபர் என் கல்யாணத்துல என் மனைவி ஆடுறாங்கன்னா என்னுடைய அப்பாவோ அம்மாவோ அவங்க அதை ஏத்துக்க தயாராக இல்லை என்று சொல்கிறார்.

அதற்கு அந்த கணவரின் மனைவி அவங்க அப்பாவோ அம்மாவோ பிரச்சனை பண்றதை விட நான் பயங்கரமா பிரச்சனை பண்ணுவேன் என்பது அப்போ அவங்களுக்கு தெரியாம போயிடுச்சு சார் என்று சொல்கிறார். அதுபோல இன்னொரு கணவர் அவங்க சோசியல் மீடியாவில் போஸ்ட் பண்றதுக்காக எடுக்குறாங்க என்று சொல்ல, அதற்கு அவருடைய மனைவி அப்போ எங்க ஹேப்பினஸை எப்படி காட்டுறது என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

இதற்கு அதிகமான ரசிகர்கள் நம்மளுடைய சந்தோஷத்தை எதற்காக அடுத்தவர்களிடம் காட்டி அவர்களை வெறுப்பேற்ற வேண்டும். பல நேரங்களில் பலர் வருத்தமாக இருக்கின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைப்பதில்லை. ஆனாலும் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்லி அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி நாம சந்தோசம் கொள்ள வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

அதுபோல இன்னொரு ப்ரோமோவில் ஆண்கள் தங்களுடைய வருத்தங்களை கொட்டி இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு கணவர் நமக்கு வரவேண்டிய கடனை எல்லாம் பார்த்து முடிச்சுட்டு வர்றதே டான்ஸ் ஆடிட்டு வர்ற மாதிரிதான் என்று சொல்ல, இன்னொரு கணவர் எனக்கு டான்ஸ் ஆடுறது என்பது என்னுடைய மைண்டில் வந்ததே கிடையாது என்று சொல்ல, அதற்கு பதிலடியாக அங்கு இருப்பவர்களில் ஒருவருடைய மனைவி எந்த பிளாட்பாரத்தில் ஆடலாம் எந்த பிளாட்பாரத்தில் ஆடக்கூடாது என்ற நாலேஜ் எனக்கு என்று சொல்லி இருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X