நீயா நானா நிகழ்ச்சியால் இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல..! 7 பீரோ புடவை வைத்திருக்கும் பெண் உருக்கம்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பத்மஜா என்கிற பெண் தான் ஏழு பீரோ நிறைய புடவை வைத்திருப்பதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய நிலைமை ரொம்பவே மாறி இருக்கிறது என்று பல தகவல்களை சமீபத்தில் பேட்டியில் கூறி இருக்கிறார்.

 Neeya Naana show after Appreciation for the lady who loves handloom sarees

உலகில் எங்கு எல்லாமோ இருந்து எனக்கு போன் பண்ணி புடவைகள் குறித்து பலரும் கேட்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 Neeya Naana show after Appreciation for the lady who loves handloom sarees

புடவை குறித்து விளக்கம்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பல நேரங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலம் ஆகி விடுகிறது. அந்த அளவில்தான் கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடும் வேற லெவலில் வைரல் ஆகிவிட்டது. சமீபத்து சூழ்நிலையில் புடவை கட்டுவது என்பது பெண்கள் மத்தியில் குறைந்து வரும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. புடவைகள் என்றால் ட்ரடிஷனலான பங்க்ஷன்க்கு மட்டும்தான் கட்ட வேண்டும் என்ற ஒரு மனநிலையில் பெண்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் புடவைகள் மற்றும் உடைகள் என்பது மானத்தை மறைப்பதற்காக மற்றும் தங்களுடைய பகட்டை காட்டுவதற்காக என்று பலரும் நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணத்தை கடந்த வார எபிசோடு உடைத்து எரிந்து இருந்தது.

 Neeya Naana show after Appreciation for the lady who loves handloom sarees

புடவையைப் பற்றிய ஞானம்: புடவைகளில் இருக்கும் பாரம்பரியம் மற்றும் அதற்க்கு பின்னாடி இருக்கும் உழைப்பு பற்றி பல தகவல்கள் நீயா நானா நிகழ்ச்சியில் பேசப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒரு பெண் புடவைகளை குறித்தும் கைத்தறி பட்டுகளில் மீது தனக்கு இருக்கும் மோகத்தை குறித்தும் தான் தேடி சேகரித்து வைத்திருக்கும் புடவைகளின் ஞானத்தை குறித்தும் விரிவாக பேசிக் கொண்டிருந்தார். கடைசியில் தன்னிடம் ஏழு பீரோ புடவைகள் இருக்கிறது என்று கோபிநாத்துக்கு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.

 Neeya Naana show after Appreciation for the lady who loves handloom sarees

இதை நம்ப முடியவில்லையே: இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமீபத்தில் அந்தப் பெண் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு அதிகமான போன் வருகிறது. பலரும் புடவைகளை குறித்து அதன் தகவல்களை ஆர்வமாக கேட்டுக்கொள்கிறார்கள். நான் மட்டும்தான் நினைத்திருந்தேன் கைத்தறி புடவைகள் மீது எனக்கு இவ்வளவு காதல் இருக்கிறது என்று ஆனால் பலரும் இது குறித்து ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது சந்தோசமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். புதியதாக புடவை கட்டும் போது மனதிற்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனாலேயே அதை பார்த்து பார்த்து நான் வாங்கி வருகிறேன் என்று பல தகவல்களையும் கூறி இருக்கிறார். நான் விலை உயர்ந்த கைத்தறி பட்டுகளை வாங்குவது கிடையாது. என்னிடம் அதிகப்பற்றமான விலை என்றால் 8000 ரூபாய்க்கு என்னுடைய மகள் திருமணத்தின் போது வாங்கியது என்று அனைவருக்கும் அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறார்.

சொன்னதை விட அதிகம்: அதுமட்டுமல்லாமல் தன்னிடம் ஏழு பீரோ மட்டுமல்லாமல் 7 பீரோவுக்குள் வைக்க முடியாத அளவிற்கு மீதம் இருக்கும் புடவைகளையும் தங்கள் வீட்டில் சோபாவை மல்டி பர்ப்போஸாக பயன்படுத்தி அதற்குள்ளும் அடுக்கி வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் என்னிடம் ஆசைப்பட்டு யாராவது புடவை கேட்டால் நான் சந்தோஷமாக கொடுத்து விடுவேன். கைத்தறி புடவைகள் நான் கட்டி மகிழ்வதற்கு மட்டுமல்ல அந்த சந்தோஷத்தை பிறருக்கு பகிர்வதிலும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X