அந்த பாட்டு பிரபலமாகிட்டு.. ஆனா நான் பிரபலமாகல..நீயா நானாவால் இப்படி ஆகிட்டு..வேதனையை பகிர்ந்த பாடகி

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பல பின்னணி பாடகிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் மறுமலர்ச்சி திரைப்படத்தில், "நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு" எனும் பாடலை பாடிய பாடகி அம்ருதா கலந்து கொண்டிருந்தார்.

நான் பாடிய பாடல் பலருடைய ஃபேவரைட் ஆக மாறி இருந்தது. ஆனால் நான் யாருன்னு தெரியாமல் போய்விட்டது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

Neeya Naana show participated Nandri solla unaku song Fame Singer Amrutaa

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பலருடைய திறமைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அந்த மாதிரி தான் சில வாரங்களுக்கு முன்பு பல பின்னணிப் பாடகிகள் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். தங்களுடைய பாடல் பலருடைய வேதனையை மறக்க வைத்து மனதை கவர்ந்த நிலையிலும் நாங்கள் யார் என்று வெளிச்சம் எங்களுக்கு கிடைக்கவே இல்லை என்று தங்களுடைய வருத்தத்தை அந்த நிகழ்ச்சியில் கொட்டி இருந்தனர்.

குறிப்பாக நாம் சந்தோஷமாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி நம்முடைய மனதை மாற்றும் சக்தி பாடலுக்கு இருக்கிறது. அந்த அளவிற்கு நம்மளுடைய மனதை கட்டுப்படுத்தும் பாடலின் காந்த குரல் யார் என்று பலருக்கும் தெரியாது. இசைக்கு பின்னாடி மறைந்திருக்கும் முகமும் அவர்களுடைய வேதனையும் நமக்கு தெரியாது. அந்த மாதிரி தான் தற்போது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் எவர்கிரீன் சாங்காக இருக்கும்," நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு" எனும் பாடலை பாடிய பாடகி அமிர்தா தன்னுடைய வேதனையை பகிர்ந்து இருக்கிறார்.

பாடகி அம்ரிதாவின் சொந்த பெயர் சித்ரா தானாம். ஏற்கனவே ஒரு சின்ன குயில் சித்ரா இருக்கும்போது இந்த குயிலும் அதே சித்திரை மாதத்தில் அதே நட்சத்திரத்தில் தான் பிறந்திருக்கிறார். அதனாலேயே என்னவோ இவர்கள் இருவருக்கும் அதிக அளவில் நெருக்கமும் இருக்கிறதாம். பாடகி அம்ரிதா பாடகி சித்ராவிற்காக மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்து கூறி விடுவாராம்.

பள்ளி படிக்கும் போதே பாடல் தான் தன்னுடைய வாழ்க்கை என்று அதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது பாட்டு கிளாஸ் எல்லாம் படித்து பல மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் பாடி கொண்டிருந்தாராம். இப்ப இருக்கிற மாதிரி அப்போ யாருக்கும் பெரிய அளவில் பாட்டு பாட வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. இவருக்கு அப்போது பாட்டுப்பாடும் பாடகிகள் பாடகர்களை ரொம்பவே பிடிக்குமாம்.

Neeya Naana show participated Nandri solla unaku song Fame Singer Amrutaa

முதல்முறையாக இவர் தேவாவிடம் பாடல் வாய்ப்புக்காக போயிருந்தாராம். அப்போது இவர் ஒரு பாடல் பாட அது நல்லா இருக்கிறது என்று அடுத்த பாடல் பாட சொன்னாராம். அப்படியே மூன்று பாடல்கள் பாடி இருந்தாராம். ஆனால் அந்த படம் வெளியாகவே இல்லையாம். இப்ப இருக்கிற மாதிரி அப்போ சோசியல் மீடியா எதுவும் இல்லாததால் அந்த நேரத்தில் தங்களுடைய பாடல்கள் ரேடியோவில் வந்தாலே மிகப்பெரிய சந்தோசம் என்று நினைத்துக் கொண்டிருப்பாராம்.

அடுத்தடுத்து பல முயற்சிகளுக்கு பிறகு தான் இவருக்கு மறுமலர்ச்சி திரைப்படத்தில் நன்றி சொல்ல உனக்கு எனும் பாடல் பாட வாய்ப்பு கிடைத்ததாம். இந்த பாடல் அந்த நேரத்தில் அடிக்கடி ரேடியோவில் ஒலிக்கும் போது இவருக்கு பெரிய அளவில் சாதித்த மாதிரி ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்ததாம். அதைத் தொடர்ந்து இவருக்கு அதிகமான வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்து இருந்தாலும் நினைத்த மாதிரி இவருக்கு வாய்ப்பு வரவில்லையாம்.

இப்போது எனக்கு எந்த ஒரு பாடலை கேட்டாலும் அந்த பாடலில் குரல் போலவே என்னால் மாற்றிப் பாட முடியும். ஆரம்பத்தில் செக்ஸியாக இருக்கும் பாடல்கள் எல்லாம் என்னால் பாட ரொம்பவே கூச்சமாக இருக்கும் ஆனால் இப்போது எல்லா பாடல்களும் என்னால் பாட முடியும். இப்போதும் ஒரு சில திரைப்பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

ஆனாலும் சிலருக்கு என்ன தான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கும். அவர்களிடம் நதி போல ஓடிக்கொண்டே இரு என்று நான் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பேன். அந்த மாதிரி நீயா நானா நிகழ்ச்சியில் கூட நான் பாடிய பாடலை பலரும் ரசிக்கும் போது எனக்கு இந்த பாடலை இப்பவும் ரசிக்கிறார்களா? என்று இருந்தது. எப்படியோ நாம் பாடிய பாடல் பிரபலமானது அதுவே போதும் என்று கூறி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X