For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நீயா நானாவில் இந்த வாரம் என்ன டாப்பிக் தெரியுமா? வெளியான அட்டகாச புரமோ.. ரக்கட் பாய்ஸ் புலம்பல்!

  |

  சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மீண்டும் அதிகப்படியான ரசிகர்களின் கவனத்தை கடந்த சில எபிசோடாக கவர்ந்து வருகிறது.

  கணவனை விட அதிகமாக சம்பாதிக்கும் மனைவிகளையும் அவர்களது கணவன்மார்களையும் அழைத்து வந்து நடத்திய ஷோவில் நடந்த திடீர் திருப்பம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

  சீனிராஜா திடீரென சோஷியல் மீடியா ஹீரோவாக மாறிவிட்ட சம்பவங்களும் நடைபெற்ற நிலையில், இந்த வார நீயா நானா என்ன செய்ய காத்திருக்கிறதோ என்கிற கேள்வி புதிய புரமோவை பார்த்ததும் எழுந்துள்ளது.

  சிவகார்த்திகேயனை ப்ரோமோஷனுக்கு அனுமதிக்காத லீடிங் சேனல்கள்: அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு!சிவகார்த்திகேயனை ப்ரோமோஷனுக்கு அனுமதிக்காத லீடிங் சேனல்கள்: அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு!

  திடீர் ஹீரோவான சீனிராஜா

  திடீர் ஹீரோவான சீனிராஜா

  நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீனிராஜாவின் மனைவி தனது மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டையே தனது கணவர் ஒரு மணி நேரம் எழுத்துக் கூட்டி படிப்பார் என படுகேவலமாக பேச, பரிசை சீனிராஜாவுக்கு கொடுத்து அவரை ஹீரோவாக்கி அவரது மனைவியை நோஸ் கட் செய்திருந்தார் கோட் போட்ட கோபிநாத். எங்க அப்பா தோற்கவில்லை என சொல்லி அந்த மகளும் ரசிகர்கள் மனதில் தங்கமகளாக மாறிவிட்டாள்.

  மனைவி தான் காப்பாத்துறாரு

  மனைவி தான் காப்பாத்துறாரு

  ஆனால், யூடியூப் சேனல்கள் உடனடியாக டிரெண்டான இருவரையும் அணுகி பேட்டி எடுத்த நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வரும் அந்த சீனிராஜாவை வேலைக்குப் போய் சம்பாதித்து காப்பாத்துறதே அவருடைய மனைவி தான் என்பது தெரியவந்தது. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என சீனிராஜாவின் மனைவி சைடும் ஆதரவாக கமெண்ட்டுகள் பறந்தன.

  இந்த வாரம் நீயா நானாவில்

  இந்த வாரம் நீயா நானாவில்

  இந்நிலையில், இந்த வாரம் நீயா நானா என்ன டாப்பிக்கை கையில் எடுத்து பேசப் போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருந்த நிலையில், பாய்ஸ் vs கேர்ள்ஸ் கான்செப்ட்டையே கையில் எடுத்து இருக்கிறது நீயா நானா. பசங்களும், பெண்களும் என்ன என்ன பேசப் போறாங்க, எத்தனை வீடியோ மீம்ஸ் உருவாகப் போகுது, எந்த பொண்ணு சிக்கப் போறான்னு இப்பவே கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  சீ அது தான் பிரச்சனையே

  சீ அது தான் பிரச்சனையே

  நீயா நானாவின் லேட்டஸ்ட் எபிசோடு டிரெண்டாவதற்கு முன்னாடி தமிழா தமிழா நிகழ்ச்சியில் சாக்லெட் பாய்ஸ் vs ரக்கட் பாய்ஸ் டாபிக் இடம்பெற்று வேறலெவலில் டிரெண்டானது. அதில், ஒரு இளம் பெண் பேசிய சீ அதுதான் பிரச்சனையே என்பதை வைத்தே பரிதாபங்கள் யூடியூப் சேனல் எல்லாம் மரண ட்ரோல் செய்திருந்தது. அந்த இளம் பெண்ணை வைத்து ஏகப்பட்ட வீடியோ மீம்களும் பறந்தன.

  ரக்கட் பாய் புலம்பல்

  ரக்கட் பாய் புலம்பல்

  இந்நிலையில், இந்த வாரம் நீயா நானாவிலும் ரக்கட் பாய்ஸ் டாப்பிக் தற்போது வெளியாகி உள்ள புரமோவில் இடம்பெற்றுள்ளது. அதில், நீண்ட தாடியுடன் இருக்கும் ஒரு இளைஞர் ரக்கட் பாய் புடிக்கும்னு சொல்றதெல்லாம் சும்மா பொய் சார், எந்த பொண்ணும் செட்டே ஆக மாட்றாங்க என ஃபீல் பண்ணி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

  கவிதை மட்டும் சொல்லாதீங்க

  கவிதை மட்டும் சொல்லாதீங்க

  அன்பே நீ இட்லி.. நான் சட்னியாக வரவா என கவிதை சொல்லி கொல்றானுங்க சார் என ஒரு இளம்பெண் சொல்ல, என்ன வேணா செய்யுங்க, ஆனால், இந்த கவிதை மட்டும் சொல்லி கொல்லாதீங்க என கோபிநாத் காமெடி பஞ்ச் அடிப்பதும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த வாரம் என்ன சம்பவங்கள் காத்திருக்கோ!

  English summary
  Vijay Tv debate show Neeya Naana this week debate topic Boys vs Girls new promo out now. Neeya Naana latest episode trending due to Seeniraja content seeks more attention to that show in recent times.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X