பகலவன் தெரியும்... அது என்ன பதவன்.. இந்த வார நீயா நானா மறக்காம பாருங்க!

சென்னை: விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ் தமிழ் என்று எப்போதும் பேசிக்கொண்டு இருப்பவர்களின் மகிழ்ச்சி பெருமை பற்றிய விவாதம் நடக்கிறது. கலந்துக்கொண்ட ஆன்றோர் சான்றோர் பல விதத்தில் தமிழ் மொழியின் பெருமையை பற்றி பேசுகின்றனர்.

விஜய் டிவி ட்வீட் செய்து இருக்கும் ப்ரோமோவைப் பார்த்தே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும், விஜய் டிவி இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒரு மணி நேரத்துக்கு பதில் 2 மணி நேரமாக நீட்டித்து ஒளிபரப்பலாம் என்றும் ட்வீட் செய்துள்ளனர்.

விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சில் பங்கேற்று தோற்றுப்போன சிலரும் மற்ற சானல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றனர் என்று நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பு குறித்து ஒரு ரசிகர் ட்வீட் செய்துள்ளார்.

நான் எடிஷன்

நான் எடிஷன்

எடிஷன் ஒரு ஆயிரம் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்தார். அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்து இருக்கும்? அது போல சிந்து வெளியில் உள்ள 3 ஆயிரம் நூல்களை நான் படித்து இருக்கிறேன் எனும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்? எடிஷன் பண்ணினால் பெரிசு.. நான் செய்தால் அதுக்கு மதிப்பு இல்லையா என்று ஒரு வல்லுநர் பேச... உண்மை உண்மை என்று ஆமோத்தித்தார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கோபிநாத்.

புலிமான் கோம்பை

புலிமான் கோம்பை

புலிமான் கோம்பையில அவ்வன் பதவன் என்று ஒரு கல்வெட்டை கண்டு பிடிச்சாங்க. அந்த கல்வெட்டில் இருந்த பதவன் என்று சொல்லுக்கு யாருக்கும் பொருள் தெரியலை. பதவன் என்பவன் கைடு.. பாதை காட்டுபவன். நிலத்து வழி போறதுக்கு, கடல் வழி போறதுக்கு இன்னும் புதிதாகவும் பாதை காட்டுபவன் பதவன். பதவன் என்ற சொல்லுக்கான பொருளை நான் கண்டு பிடித்து சொன்னதில் எனக்கு மகிழ்ச்சி என்று சொன்னார்.

வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு

வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு

வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வரணும்னு நினைச்சு உட்கார்ந்து இருந்தபோது அவருக்கு வழி தெரியலை. அப்போது மாலுமி கணக்கன் என்கிற ஒரு தமிழ் மாலுமி அங்கு இருந்தார். அவர்தான் வாஸ்கோடகாமாவை அழைச்சுட்டு வந்து கல்லிக்கோட்டையில் கொண்டு வந்து விட்டார் என்றும் சொன்னார் அந்த வல்லுநர். அப்போ வாஸ்கோடகாமா இந்தியா வந்ததே பதவன் வழிக்காட்டுதலால்தான் என்று உறுதி படுத்திக்கொண்டார் கோபிநாத்.

உலகின் 40 துறைமுகங்களில்

உலகின் 40 துறைமுகங்களில்

உலகின் 40 துறைமுகங்களில் தமிழ் மாலுமிகள், பதவன்கள், கப்பலை சரிப்பார்ப்பவர்கள் இருந்தார்கள். இப்படி இவைகளை எல்லாம் கண்டு பிடித்து இருக்கிறேன் நான்.. எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்? நாட்டிற்கே மன்னன் ஆனது போல் மகிழ்ச்சி எனக்கு என்று கூறினார் தமிழ் தமிழ் என்று முழக்கமிடும் அந்த வல்லுநர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X