19 வயசுல தங்கச்சி பாப்பா பொறக்கக் கூடாதா.. கிண்டலடித்த ரசிகர்களைப் போட்டுத் தாக்கிய நேஹா!
சென்னை: 19 வயதில் தனக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கிறது என பயங்கரமான சந்தோஷத்தினை வெளிப்படுத்திய நேகா மேனன் இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் வெளியிட்ட நெகட்டிவ் கமெண்ட் களுக்கு தக்க பதிலடி கொடுத்தது தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
குழந்தை பருவத்தில் இருந்தே சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் நேகா மேனன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் போன்ற பிரபலமான சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அதுவுமில்லாமல் சினிமாக்களிலும் நாரதர், ஜாக்சன்துரை போன்ற படங்களில் நடித்திருக்கிறார் .தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செல்ல மகளாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .

பாக்யலட்சுமி சீரியல்
இந்த சீரியலில் இவரது நடிப்பை பார்த்து பலர் இவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். வீட்டிலிருக்கும் அப்பாவின் செல்ல மகள் கேரக்டரை போலவே இவரது கேரக்டர் இருப்பதால் இவரும் கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதனாலேயே இவரை பலருக்கும் பிடித்திருக்கிறது. அம்மாவை எதிர்த்து பேசும் அப்பாவின் செல்ல மகளாக இவர் இருப்பதால் சிலர் இவரை திட்டினாலும் சிலர் இவருடைய நடிப்பை புகழ்ந்து கூறி வருகின்றனர்.

ஊக்கம் தரும் சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பல பெண்களுக்கு மோட்டிவேஷனல் ஆக இருந்து வருகிறது .ஒரு குடும்பத்தின் ஒரு பெண் கணவர் மற்றும் 3 வளர்ந்த பிள்ளைகளுடன் எப்படி குடும்பத்தை சமாளித்து வருகிறார் என்பதை பற்றி தான் இந்த கதை இருந்தாலும் அந்தப் பெண்ணிற்கு கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கும் பெண்களுக்கு தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவர் எடுக்கும் முடிவுகள்தான் இதில் பெரும் திருப்புமுனையாக இருந்து வருகிறது .

மனசு மாறியது
இதை பார்த்து பல பெண்கள் தங்களுக்கு ஒரு மோட்டிவேஷன் களாக இருந்து வருகிறது என கூறி வரும் நிலையில் முதலில் தனது அம்மாவை புரிந்துகொள்ளாமல் எதிர்த்து பேசி வந்த இவர் பின்பு மனது மாறி அவரின் கஷ்டங்களைப் புரிந்து கொள்கிறார் .இந்த கேரக்டரில் இவருடைய நடிப்பு நடிப்பாக தெரியவில்லை ரியலாக தான் தெரிகிறது என பலர் கூறி வரும் நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவை பற்றியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நேஹா ஆக்டிவ்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை போஸ்ட் பண்ணி வருவார். ஆனால் தற்போது இப்போது இவர் வெளியிட்ட வீடியோக்கள் தான் இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. அதில் சில மாதங்களுக்கு முன்பு இவர் சீக்கிரத்தில் ஒரு சந்தோஷமான விஷயத்தை கூறுகிறேன் என கூறியிருந்தார் .

சந்தோஷ செய்தி
அது என்ன சந்தோஷம் என கேட்டு வந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என பதிலளித்திருந்தார். ஆனால் இப்போது அந்த சந்தோஷத்திற்கான காரணத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் .அதில் எனது தாய் கர்ப்பமாக இருந்தால் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது .அவர் மருத்துவமனையில் நலமுடன் இருக்கிறார் என சந்தோசமாக வீடியோவில் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

19 வயதில் தங்கச்சி பாப்பா
இவருக்கு 19 வயது பருவ மங்கையாக இருக்கும் போது இவரது தாய் இந்த நேரத்தில் குழந்தை பெற்றிருக்கிறார் என கருதி வந்த சிலர் பல்வேறு நெகட்டிவ் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். அதனை பார்த்ததும் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் இந்த செய்திக்கு கிடைக்கும் குப்பை பதில்களுக்கு நான் எதுவும் செய்யப்போவதில்லை.

டைம் வேஸ்ட் பண்ணாதீங்க
உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் என கூறியிருக்கிறார் .இவ்வளவு போல்ட் ஆக பேசியிருப்பதை பற்றி பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் தங்கச்சி பாப்பா பிறந்து இருப்பதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்னதான் திட்டினாலும் சிலரைத் திருத்த முடியாது என்பது உண்மைதான் போல.


Click it and Unblock the Notifications











