twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நேர்கொண்ட பார்வை... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

    |

    சென்னை: லட்சுமி ராமகிருஷ்ணன்...கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என்று பன்முகம் கொண்ட திறமைசாலி. துன்பம், துயரம் என்று பல்வேறுவித கஷ்டங்களில் மாட்டிக்கொண்ட பெண்களுக்கும், ஆண்களுக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடுநிலை வகித்து ஒரு நீதிபதி போல செயல்பட்டவர்.

    ஜீ தமிழ் டிவியின் முதல் சூப்பர் ஹிட் ஷோ என்றால், அது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிதான். பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவி, மாணவர்கள் கூட அடிக்ட் ஆகி நிகழ்ச்சியை வீட்டுக்குத் தெரியாமல் படிக்கிறேன் என்று ரூமில் கதவை சாத்திக்கொண்டு, லேப் டாப்பில் தொடர்ந்து பார்த்து வந்தார்கள்.

    இப்படி எல்லாம் நடக்குமா என்று வியப்படையும் அளவுக்கு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு புகார் எடுத்து வந்த பெண்கள், ஆண்கள், மாணவர்கள், முதியோர்கள் என்று, அவர்கள் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு இன்னொரு உலகத்தை காண்பித்தார்கள். நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன், டென்சன் ஆகாம ரொம்ப கூலா நடத்தி வந்தார்.அதனால்தானோ என்னவோ நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு டென்சன் வராது.. சில சமயம் சிரிப்பு கூட வரும்.

    விமர்சனங்கள் பலவிதம்

    விமர்சனங்கள் பலவிதம்

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பலரும் பல விதமாக விமர்சித்து வந்தாலும், லட்சுமி ராமகிருஷ்ணன் எதையும் கண்டுக்கொண்டார் இல்லை. அவர் தன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து ஷோவை சிறப்பாகவே நடத்தி வந்தார். இடையில் பிரேக் எடுத்து, தனது பட வேலைகள் என்று முடித்துவிட்டு, மீண்டும் புதுப் பொலிவுடன் நிகழ்ச்சியைத் துவங்குவார்.மீண்டும் வெற்றி நடைபோடும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி.

    Kanmani Serial: வாடகைத் தாய்...சிக்கலோ சிக்கல்...பாவம் முத்துச்செல்விKanmani Serial: வாடகைத் தாய்...சிக்கலோ சிக்கல்...பாவம் முத்துச்செல்வி

    மீம்ஸ் கிரியேட்டர்ஸ் டிக்டாக்

    மீம்ஸ் கிரியேட்டர்ஸ் டிக்டாக்

    சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் கொண்டு வரும் பல்வேறு தரப்பட்டவர்களிடம் இவர் பேசும்போது பல வார்த்தைகள், வாக்கியங்களை எதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் பேசுவார். அது, மீம்ஸ் கிரியேட்டர்ஸ், டிக்டாக் வீடியோ செய்யும் ஆர்வலர்களுக்கு அல்வா சாப்பிடும்படியான விஷயமாக இருந்தது.

     என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

    மிக முக்கியமாக இவர் கோபத்தில் என்னம்மா இப்படி இப்படி பண்றீங்களேம்மா என்று பேசியது உலகத்தமிழர்கள் மத்தியில் படு பிரபலம் ஆனது. பலரும் எதாவது டென்ஷானாகும்போது என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு புலம்பும் அளவுக்கு இந்த டயலாக் உலகப் புகழப்பெற்றது. சிவகார்த்திகேயன் படத்தில் இதை பல்லவியாக வைத்து ஒரு பாடலையே இசை அமைக்கும் அளவுக்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா வசனம் பாப்புலர் ஆனது.

     நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    சொல்வதெல்லாம் உண்மை போன்ற ஒரு நிகழ்ச்சியை போலவே லட்சுமி ராமகிருஷ்ணன், கலைஞர் தொலைக்காட்சியில் நேர்கொண்ட பார்வை என்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நேர்கொண்ட பார்வை டைட்டிலே எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு என்றும் இந்த நிகழ்ச்சியை இன்னும் அலசி ஆராய்ந்து குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்து இருக்கார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

    தல அஜீத் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத் தலைப்பிலேயே நிகழ்ச்சித் தலைப்பும் நச்னு இருப்பதால், பலருக்கும் நிகழ்ச்சி பிடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது.திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

    English summary
    Lakshmi Ramakrishnan is a multi-faceted talent with story, screenplay, movement and acting. Women and men who have been trapped in various forms of suffering and misery are neutral in the reality show and act like a judge.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X