தேசத்தை கலக்கிய நேசமணி ஞாயிற்று கிழமை உங்க வீடு தேடி வர்றார்!

சென்னை: சவூதி அரேபியாவில் யாரோ ஒருவர் சுத்தியல் படத்தை போட்டு இது என்ன என்று ஹேஸ்டேக் செய்து சமூக வலைத் தளத்தில் விஷயத்தை ஆரம்பிச்சு வச்சார்.

இதுக்கு பேரு சுத்தியல்... இதில் மண்டையில் அடிச்சா டங்கு டங்குன்னு சத்தம் கேட்கும் இதைத்தான் நேசமணி தலையில் போட்டார்கள் என்று தமிழர் ஒருவர் பதில் போட...

இப்போ நேசமணிக்கு என்னாச்சுன்னு இன்னொருத்தர் கேட்க, ஆஸ்பத்திரியில் சீரியஸ் கண்டிஷனாம்னு வேற ஒருத்தர் பதிவிட்டார்.

ஆஸ்பத்திரி அப்போலா

ஆஸ்பத்திரி அப்போலா

அப்போலா ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண சொல்லுங்கன்னு ஒருத்தர் ஆலோசனை சொல்ல இப்படியே ஒருத்தர் மாற்றி ஒருவர்னு நிக்காம கடந்த மூணு நாளா சமூக வலை தளங்களில் நேசமணி வடிவேலுவின் சுத்தியல் சீன் இப்போதைய டிரண்டா நீடிச்சு போயிகிட்டே இருக்கு.

முதலிடம் ஹேஸ்டேக்கில்

முதலிடம் ஹேஸ்டேக்கில்

நேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதை விட நேசமணியின் இந்த சுத்தியல் ஆப்பு ஹேஸ்டேக்கில் முதலிடம் பிடித்தது. அத்தோடு நில்லாமல் சர்வதேச அளவிலும் இது வைரலாகப் பரவி முதலிடத்தைப் பிடித்து மிரள வைத்தது.

நேசமணி வடிவேலு

நேசமணி வடிவேலு

சித்திக் இயக்கத்தில் ஃபிரண்ட்ஸ் படத்தில் வருவதுதான் இந்த நேசமணி காமெடி. வடிவேலுதான் இதில் நேசமணி சித்தப்பாவாக நடிச்சு இருப்பார். ரமேஷ் கன்னாதான் மாடியில் இருந்து டொங்குன்னு நேசமணி சித்தப்பா தலையில் இந்த சுத்தியை போடுபவர்.

ஆணியே வேணாம்

ஆணியே வேணாம்

இப்படி இந்த படத்தின் இந்த காட்சி இப்போது டிரென்டில் இருக்க ,படத்தின் உரிமையை வைத்திருக்கும் சன் டிவி சும்மா இருப்பாங்களா? ஒரு ஆணியும் புடுங்க வேணாம்னு இந்த வாரம் ஞாயிற்று கிழமை மதியம் 3 மணிக்கு ஃபிரண்ட்ஸ் படத்தை சன் டிவி ஒளிபரப்பு செய்யறாங்க.

சன் டிவியின் விளம்பர யுக்தி எப்படி இருக்கு பாருங்க.

விஜயும்,சூரியாவும்

விஜயும்,சூரியாவும்

விஜயும்,சூரியாவும் கல்லூரி கால நண்பர்கள். சூர்யா நடிக்க ஆரம்பிச்சப்போ விஜய் பீக்ல இருந்தார். சூர்யாவுடன் நேருக்கு நேர் படத்தில் நடிக்கவும், தொடர்ந்து ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுடன் விஜய் சேர்ந்து நடிச்சதும் உண்மையில் விஜயின் பெருந்தன்மை என்று கூட சொல்லலாம்.

விஜய் விஜயகாந்த்

விஜய் விஜயகாந்த்

நடிகர் விஜய் படத்தில் தானும் நடிக்க சம்மதித்தவர் நடிகர் விஜயகாந்த். தன் படத்தில் சூர்யாவை நடிக்க வச்சு அழகு பார்த்தவர் நடிகர் விஜய்.

காலம் கடந்தாலும் நேசமணியை ஆஸ்பத்திரில் சேர்த்து,அதுவும் அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்த்து, பால்குடம், காவடி,அழகு குத்துதல் என்று நேசமணி நலம்பெற கடவுளிடம் அருள் வேண்டும் நெட்டிசன்களை பாராட்டுவதா...

காமெடியை இயக்கியவரை பாராட்டுவதா, நடிச்ச வடிவேலுவை பாராட்டுவதா....? என்னவோ போங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X