வாவ்.. ஹேன்ட்ஸம்.. பிக்பாஸ் புரமோவில் கமலை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த ரசிகர் பெருமக்கள் கமலை பார்த்து ஜொள்ளுவிட்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3யும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.
அதனை தொடர்ந்து இன்றுதான் மீண்டும் சந்திக்க போகிறார். கடந்த 5 நாட்களாக பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் கமல் பங்குபெறும் இன்றைய எபிசோடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல மணி நேர தாமதம்
இந்நிலையில் காலை முதல் கமல் பங்கேற்கும் புரமோ எப்போது வெளியாகும் என காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் பல மணி நேர தாமதத்திற்கு பிறகு பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பானது இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ.

பிரவுன் பேன்ட் ஹாஃப் ஸ்லீவ் ஷர்ட்
இதில் பிரவுன் பேன்ட் ஹாஃப் ஸ்லீவ் ஷர்ட்டில் செம ஃபிரஷாக தோன்றினார் கமல். அப்போது காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது அன்பாய் என்றார். பல நாள் காத்திருப்புக்கு பின்னர் இந்த வாரத்தில் சென்னையின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

ஒரே டயலாக்
பிக்பாஸ் வீட்டிலும் ஹவுஸ் மேட்ஸ்கள் தங்களின் சோகக்கதையை சொல்லி அழுத போது சக ஹவுஸ்மேட்ஸ்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறினர். இந்த இரண்டையும் குறிப்பிடும் வகையில் ஒரே டயலாக்காய் காத்திருந்து காத்திருந்து கருணை மழை பொழிந்தது அன்பாய் என்று கூறினார்.
ஷோக்கா கீறார்பா
அதோடு கமல் இந்த காஸ்ட்யூமில் டக்கராய் இருந்தார். அவரை பார்த்து ஜொள்ளு விடும் வகையில் நெட்டிசன்கள் டிவிட்டி வருகின்றனர். ஷோக்கா கீறார்பா என சென்னை தமிழில் வர்ணிக்கிறார் இந்த நெட்டிசன்.
இந்த டிரெஸ்ல
கமல் சார் எவ்வளோ அழகா இருக்கார் இந்த டிரெஸ்ல என சொல்கிறார் இவர்.
ஹேன்ட்ஸமாக இருக்கிறார்
இந்த காஸ்ட்யூமில் கமல் பார்க்க ஹேன்ட்ஸமாக இருக்கிறார் என்கிறார் இந்த நெட்டிசன்.
தலைவா..
நீங்க கலக்குங்க தலைவா.. என கூறுகிறார் இந்த ரசிகர்.
இந்தியாவின் கலைமகன்
அழகும் அறிவும் ஒருசேர பெற்ற இந்தியாவின் கலைமகன்
தமிழகத்தின் தலைமகன்.. மக்கள்நீதி மய்யத்தின் முதல்வன்..
எங்கள் தலைவன்.
ஃபிரஷ் அன்ட் ஹேன்ட்ஸம்
வாவ்... கமல்ஹாசன் லுக்ஸ் சோ.... ஃபிரஷ் அன்ட் ஹேன்ட்ஸம் என்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











