கவினெல்லாம் ஒரு ஆளு.. அவனுக்காக அடிச்சுக்குதுங்களே.. கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day:38 : காதல் முறிவால் தவிக்கும் Sakshi

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவும் சாக்ஷியும் கவினுக்காக சண்டை போட்டுக்கொள்வதை பார்த்து பார்வையாளர்கள் கடுப்பாகியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் நாள் தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் பங்கேற்பதாக கூறிய கவின் சாக்ஷியை காதலிப்பதாக கூறினார்.

தற்போது சாக்ஷியை கழட்டிவிட்டு லாஸ்லியாவிடம் நெருக்கமாக உள்ளார். கவினும் சாக்ஷியும் மாறி மாறி வழிந்துகொள்கின்றனர். தற்போது இந்த வழிசல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

கழட்டிவிட்ட கவின்

கழட்டிவிட்ட கவின்

அதாவது லாஸ்லியாவும் சாக்ஷியும் கவினுக்காக மாறி மாறி சண்டை பிடித்துக்கொள்கின்றனர். இருவருக்கும் இடையில் சக்களத்தி சண்டை ஆரம்பமானதால் கவின் சாக்ஷியை கழட்டி விட்டதாக தெரிகிறது. இதனால் ஏமாந்துபோன சாக்ஷி கண்ணீர்விட்டு அழுகிறார்.

உண்மையாக காதலித்த சாக்ஷி

உண்மையாக காதலித்த சாக்ஷி

உலகமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் என்று தெரிந்தும் சாக்ஷி கவினை காதலிப்பதாக வெளிப்படையாக கூறினார். கமல்ஹாசனிடமும் சாக்ஷி தனது காதலை கூறினார். ஆக சாக்ஷி, கவினை உண்மையாகதான் காதலித்துள்ளார்.

போட்டி போடும் லாஸ்லியா

போட்டி போடும் லாஸ்லியா

ஆனால் கவின் யாரையும் தான் உண்மையாக காதலிக்கவில்லை என்றார். கமலிடம் அதையேதான் கூறினார். ஹவுஸ்மேட்ஸிடமும் அதையேதான் கூறினார். ஆக பெண்களை கிள்ளுக்கீரையாகதான் பயன்படுத்தி வந்துள்ளார் கவின். இதை புரிந்துகொள்ளாமல் கவினுக்காக போட்டி போட்டு லாஸ்லியாவும் தனது பெயரை டேமெஜ் செய்து வருகிறார்.

கவின்தான் வேணுமா?

கவின்தான் வேணுமா?

இன்றைய புரமோவில் சாக்ஷி கவினுடனான காதல் முறிந்ததற்காக கண்ணீர்விட்டு அழுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சாக்ஷி, லாஸ்லியா ஆகிய இருவருக்கும் டைட்டில் வேண்டாமா? 50 லட்சம் ரூபாய் பரிசு வேண்டாமா? கவின்தான் வேண்டுமா, அவன் அந்த அளவுக்கு வொர்த் இல்லை, அவனெல்லாம் ஒரு ஆளே இல்லை என டிவிட்டி வருகின்றனர்.

லாஸ்கூட சுத்துறதுதான்

சாக்சிக்கு, கவின் கழட்டி விட்டதை விட அவன் லாஸ்லியா கூட சுத்துறது தான் ரொம்ப காண்டா இருக்கும் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

லாஸ்லியாதான் பிரச்சனை

பார்க்கும் போது சாக்ஷிக்கிட்ட சின்ன சின்ன தப்பு இருக்கலாம் ஆனா லாஸ்லியாவைவிட நல்லவர் தான். அவள கூல் பண்றதுக்கு கவின் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டான். ஆனால் லாஸ்லியா தான் இன்னும் இன்னும் அவளை வெறுப்பேற்றுகிறாள் என்று கூறுகிறார் இவர்.

வொர்த்தே இல்ல

அவன்லாம் ஒரு ஆளுன்னு.. ஏன் பொண்ணுங்களா உங்க கண்ணீரை வீணாக்குறீங்க.. அதுகெல்லாம் அவன் வொர்த்தே இல்ல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஏன் அடிச்சுக்குதுங்க?

இந்த கக்கூஸ் கவின்கிட்ட என்ன இருக்கு ஒன்னும் இல்ல அப்புறம் எதுக்கு ரெண்டும் அடிச்சுக்குதுங்க என்கிறார் இந்த நெட்டிசன்.

உடம்பு புல்லா வியாதி

கவின் எல்லாம் ஒரு ஆளு அவனுக்காக ஒரு பீலு.. அவன இரத்தபரிசோதனை செய்ய சொல்லு செய்ய மாட்டான் அவனக்கு உடம்பு புல்லா வியாதி என்று எடுத்து விடுகிறார் இந்த நெட்டிசன்.

கவின்தான் வேணுமா?

சாக்ஷி, லாஸ்லியா உங்களுக்கு 50 லட்சம் பணம், டைட்டில் எல்லாம் வேண்டாமா? கவின்தான் வேணுமா? என்னத்துக்கு வந்தீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அடேய் கவின் மச்சான் உனக்கும் தான் கேக்கறேன்.. சட்டுப்புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்கடா.. கடுப்பாகுது என்கிறார் இந்த நெட்டிசன்.

கண்ணீருக்கு தகுதியற்றவன்

விளையாட்டு வினையானது. இந்த விளையாட்ட ஆரம்பிச்ச அந்த நல்லவர் கவினுக்கு இப்போ பலத்த சப்போர்ட் இருக்கு சாக்ஷி. ஆன உன்னைதான் எல்லோரும் தப்பு என்கிறார்கள். சரியோ தவறோ உண்மையோ பொய்யோ எனக்கு உன்னுடைய உணர்வுகளை பற்றி தெரியவில்லை. ஆனால் இதில் இருந்து வெளியே வா, இவனுக்காக உன்னுடைய கண்ணீரை வீணாக்காதே, அவர் அதற்கெல்லாம் தகுதியற்றவன். என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X