"தீண்டத்தகாதவன்" என்று சொன்னாரா தர்பூசணி திவாகர்?.. வலுக்கும் எதிர்ப்பு.. விஜய் சேதுபதி கவனிச்சீங்களா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் காண்ட்ரவர்சியலான போட்டியாளர் என்றால் அது தர்பூசணி திவாகர் தான். அவ்வப்போது அவரது பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இப்படி இருக்கும்போது சக போட்டியாளர் கானா வினோத்தை பார்த்து தீண்டத்தகாதவன் என்று கூறியதாக இணையவாசிகள் பலரும் தர்பூசணி திவாகர் மற்றும் பிக் பாஸ் குழுவினரை கடுமையாக சாடி வருகிறார்கள்.

தர்பூசணி திவாகர், இந்த சீசனில் முதல் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர். சமூக வலைதளத்தில் அவர் டிரெண்ட் ஆன இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பா என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தனது துறை சார்ந்து, அதாவது பிசியோதெரபி துறை சார்ந்து மிகவும் திறமையானவராக இருக்கிறார், அத்துடன் நடிப்பிலும் ஆர்வம் உடையவராக இருக்கிறார் என்று பிக்பாஸ் தரப்பு நியாயத்தை விஜய் சேதுபதி சொன்னார்.

கானா சாம்ராஜ்யம் மற்றும் தர்பீஸ் சாம்ராஜ்யம் என்ற டாஸ்கின் போது கானா வினோத்தை பார்த்து தீண்டத்தகாதவன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக இணையவாசிகள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதாவது அதை ஒளிபரப்பும் போது பிக் பாஸ் தரப்பில் தீண்டத்தகாதவன் என்ற வார்த்தையை மியூட் செய்துவிட்டார்கள் என்றும், ஆனாலும் வாய் அசைவிலும், வார்த்தையின் தொடக்க ஓசையை வைத்தும் தர்பூசணி திவாகர் சொன்ன வார்த்தை, தீண்டத்தகாதவன் என்ற வார்த்தை தான் என்று பலரும் கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள்.

எதிர்ப்பும் குற்றச்சாட்டும்: அதாவது, " தீண்டத் தகாதவன் சொல்றான்" என்று ஒரு National televisionல வடசென்னை கானா வினோத்தை இந்த சாதிவெறி திவாகர் சொல்கிறார். அயோக்கியத்தனம்,, கண்டிக்கத்தக்கது, இது PCR வழக்கில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டிய விஷயம். பிக்பாஸ் தமிழ் சீசன் 9இன் வீட்டில் இருக்கும் அனைவரையும், "என்கிட்ட பேச உனக்கு தகுதி இல்லை.. என் லெவெல் வேற" என்று ஆணவச் செருக்கோடே பேசிக் கொண்டிருக்கிறார் இந்த சாதி வெறி பிடித்த திவாகர். சாதிவெறி திவாகரை ஒரு காமெடி பீஸ் என்றும் கண்டெண்ட் மெட்டீரியல் என்றும் திவாகர் செய்வதை நார்மலைஸ் செய்கிறார்கள் விஜய் சேதுபதியும் விஜய் தொலைக்காட்சியும். உள்ளிருக்கும் பெண்களிடம் பெரும்பாலும் bad touch செய்ய முயல்கிறார் திவாகர். இப்படிப்பட்ட நபரை எப்படி தொடர விடுகிறார்கள்?" என்று பதிவிட்டு வருகிறார்கள். இது போன்ற பல பதிவுகளை எக்ஸ் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இதற்கு பிக் பாஸ் தரப்பிலோ அல்லது விஜய் சேதுபதியோ பதில் அளிப்பார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Netizens And Bigg Boss Fans Slams Watermelon Diwakar Who Used Untouchable was Gana Vinoth
Photo Credit:

தகுதி தராதரம் டூ தீண்டத்தகாதவன்: தர்பூசணி திவாகரைப் பொறுத்தவரையில், பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் யாராவது சண்டைக்கு வந்துவிட்டால், அவர்களைப் பார்த்து உனக்கு என்ன தகுதி இருக்கிறது, என்ன தராதரம் இருக்கிறது என்ற வார்த்தைகளைத்தான் அதிகம் பயன்படுத்தி வந்தார். இதற்கு சக போட்டியாளர்கள் தொடங்கி, ஏற்கனவே தர்பூசணி திவாகரின் பேச்சில் அடிக்கடி இடம் பெற்ற வார்த்தைகள் தகுதி, தராதரம் என்பது. சில வாரங்களுக்கு முன்னால், விஜய் சேதுபதி அதைக் கண்டிக்கவே, தற்போது தகுதி, தராதரம், ரேஞ்ச் போன்ற வார்த்தைகள் தீண்டத்தகாதவன் என்ற வார்த்தையாக மாறி நிற்கிறது என்றும் ரசிகர்கள் பேசுவதைப் பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X