வலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்! வைரல் வீடியோ

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : Sandy and losliya fight

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரன் பெட்டில் இருந்து எழுந்திரிக்க முடியாமல் வலியால் துடித்த போது என்ன என்று கூட கேட்காமல் கவின் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த வீடியோ வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரன் மூச்சு பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் தனியாக எழுதிரிக்க முடியவில்லை, தனியாக படுக்கவும் முடியவில்லை.

கையில் குடையை வைத்துக்கொண்டு, அதன் பேலன்ஸிலேயே நடமாடி வருகிறார் சேரன். மூச்சுப்பிடிப்பால் டாஸ்க்கில் கூட பங்கேற்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார் அவர்.

தர்ஷன், சாண்டி, முகென்

தர்ஷன், சாண்டி, முகென்

இந்நிலையில் நேற்றைய எபிசோடி வலியால் பாதிக்கப்பட்ட சேரன், பெட்டில் இருந்து எழுந்திரிக்க முடியாமல் தவிக்கிறார். இதனை பார்த்த முகென், தர்ஷன் மற்றும் சாண்டி அவருக்கு ஓடி வந்து உதவி செய்கின்றனர்.

வேடிக்கை பார்த்த கவின்

வேடிக்கை பார்த்த கவின்

மேலும் தரையில் அவரை படுக்க வைத்து கை கால்களை நீட்டி மடக்க உதவி செய்கின்றனர். ஆனால் அந்த அறைக்குள்ளேயே பக்கத்து பெட்டிலேயே படுத்திருக்கும் கவின், என்ன என்று கூட கேட்காமல் பேசாமல் படுத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்.

கண்டுக்காமல் கவினுடன் கடலை

கண்டுக்காமல் கவினுடன் கடலை

இதேபோல் சாப்பிட்டுவிட்டு கை கழுவ செல்லும் போதும் வேஸ்ட்டை குப்பைத் தொட்டியில் கொட்டும் போதும் நடக்க முடியாமல் எழுந்திருக்க முடியாமல் தவிக்கிறார் சேரன். அப்போது அவரை கடந்து செல்லும் லாஸ்லியா, என்ன என்று கேட்காமல் கவினுடன் பேசிக்கொண்டே சோஃபாவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

நன்றிக்கெட்டவர்கள்

இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், நன்றிக்கெட்டவர்கள் சேரன் கிட்டயே வரவில்லை. சேரன் நலன் பெற பிராதிப்போம் என டிவிட்டி வருகின்றனர்.

காலை அமுக்கிவிட்ட சேரன்

காலை அமுக்கிவிட்ட சேரன்

லாஸ்லியாவுக்கு ஏதாவது காயம் என்றாலோ அல்லது அவர் தடுமாறினாலோ பதறிப்போய் பார்ப்பவர் சேரன். பிளாக் பேலன்ஸிங் டாஸ்க்கின் போது கவின், நீண்ட நேரம் நின்றதால் அவரின் காலை பிடித்து அமுக்கிவிட்டார் சேரன்.

தீயாய் பரவும் வீடியோ

தீயாய் பரவும் வீடியோ

ஆனால் எதையுமே நினைத்து பார்க்காமல் இருவரும் என்ன என்று கூட கேட்காமல் ஓரங்கட்டி காதலை வளர்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனை பார்தத நெட்டிசன்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X