காதல் கண்ணை மறைத்துவிட்டது: கமலிடம் ஒரே போடு போட்ட ரித்விகா
Recommended Video

சென்னை: ரித்விகா வாயில் சக்கரையை தான் போட வேண்டும் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வழியாக கமல் ஹாஸனுக்கு நிஜமாகவே கோபம் வந்து நேற்று மகத், யாஷிகா, ஐஸ்வர்யாவை தாளி தாளின்னு தாளிச்சிட்டார். அதை பார்த்துவிட்டு கமல் ஹாஸனை நெட்டிசன்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கமலோடு சேர்த்து ரித்விகாவையும் பார்வையாளர்கள் பாராட்டுகிறார்கள்.

ஜனனி
மகத் செய்தது தப்பு தான் சார். அவனிடம் நாங்கள் சொல்லியும் அவன் கேட்கவில்லை. எதுக்கு இப்படி கெட்டப் பெயரை எடுக்கிற என்று நான் கேட்டேன். அதற்கு அவனோ, எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்கிறேன் என்றான். நானும், ரித்விகாவும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்கவில்லை என்று கமலிடம் கூறினார் ஜனனி.

ரித்விகா
மகத்திடம் எடுத்துக் கூறினீர்களா என்று கமல் கேட்டதற்கு ரித்விகா, மகத் செய்தது தப்பு தான். மகத்திற்குள் ஒரு நல்லவன் இருக்கான். அந்த நல்ல மகத்துக்கு சண்டை போடத் தெரியாது, சூட்சமம் செய்யத் தெரியாது, அடுத்தவர்கள் முதுகில் ஏறி சவாரி பண்ணத் தெரியாது, போலியாக இருக்கத் தெரியாது. ஆனால் அவன் அந்த மகத்தை இங்கே பிரதிபலிக்கவே இல்லை. காதல் அவன் கண்ணை முழுமையாக மறைத்துவிட்டது என்று உண்மை போட்டுடைத்தார் ரித்விகா.

யாஷிகா
அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு செய்கிறானே தவிர சுயமாக சிந்திக்கவில்லை. மும்தாஜுக்கும் மகத்துக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. ஐஸ்வர்யாவின் பிரச்சனையை தனது பிரச்சனையாக எடுத்துக் கொண்டு மும்தாஜை திட்டுகிறான் என்று எனக்கு தோன்றுகிறது என்றார் ரித்விகா. ரித்விகா கூறியதை கேட்ட கமல், மகத்துக்கு யாருடன் காதல் என்று கேள்வி எழுப்பினார். யாஷிகாவுடன் என்று சிரித்துக் கொண்டே கூறினார் ரித்விகா.

சிந்தனை
யாஷிகா ட்ரிக்கர் செய்தால் உடனே நீங்கள் ஆடினால் எப்படி, அவர் சொன்னால் நீங்கள் ஏன் யோசிக்கவில்லை என்று அய்யோ சூப்பராக கேள்வி மேல் கேள்வி கேட்டார் கமல். கமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மகத் திணறினார். கமல் ஐஸ்வர்யாவிடம் ஒன்று கேட்க அவர் சம்பந்தமே இல்லாமல் சிம்பதி கிரியேட் பண்ண கண்கலங்குவது போன்று சீன் போட்டார். நீங்க என்ன சீன் போட்டாமல் நான் ஏமாற மாட்டேன் என்று உறுதியாக இருந்துவிட்டார் கமல். கலக்குங்க ஆண்டவரே...

நிகழ்ச்சி
எனக்கு நம்பிக்கை போய்விட்டது. நான் இந்த நிகழ்ச்சியில் இனியும் தொடர்ந்தால் நன்றாக இருக்காது என்று ஐஸ்வர்யா கூறினார். இதை கேட்ட பார்வையாளர்களோ, நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம், முதலில் கிளம்புங்க என்று தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யாவை நாமினேட் செய்தால் பிக் பாஸ் தில்லாலங்கடி வேலை செய்து காப்பாற்றுவது மும்தாஜுக்கும் தெரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications











