சபாஷ், நீ நடத்தும்மா ராசாத்தி: முதல்முறையாக வனிதாவை பாராட்டும் நெட்டிசன்கள்
சென்னை: பிக் பாஸ் போட்டியாளரான வனிதா விஜயகுமாரை நெட்டிசன்கள் முதல்முறையாக மனதார வாழ்த்தியுள்ளனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடர்பாக தினமும் 3 ப்ரொமோ வீடியோக்களை வெளியிடுகிறார்கள். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள 3வது ப்ரொமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸுக்காக வனிதா விஜயகுமார் கஷ்டப்படுவது போன்று காட்டியுள்ளனர்.
முதல்முறையாக வனிதா ஸ்போர்டிவாக நடந்து கொண்டுள்ளார்.
வனிதா
ஹவுஸ்மேட்ஸுக்கு ஒரு தார் வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க வனிதா தன் மொத்த பலத்தையும் காட்டி ஒரு சாதனை செய்துள்ளார். அதை நீங்களே வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்ணுக்கு பலம் இல்லை என்று யார் சொன்னது. வனிதாவை பாருங்க, பலசாலி என்று நிரூபித்துள்ளார்.
ஆதரவு
வனிதாவுக்கு கும்கி பிஜிஎம்மை பயன்படுத்தியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இருப்பினும் ஒன்றுமே செய்யாமல் மிக்சர் சாப்பிடுபவர்களை விட வனிதா எவ்வளவோ மேல் என்று நெட்டிசன்கள் வனிதாவை ஊக்கப்படுத்தியுள்ளனர்.
பாராட்டு
வனிதா விஜயகுமார் பிக் பாஸ் 3 வீட்டிற்கு சென்றதில் இருந்து அவரை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்தனர். இந்நிலையில் முதல் முறையாக வனிதாவுக்கு பாராட்டுக்கள் வந்து குவிகிறது. நீ நடத்துமா ராசாத்தி என்று நெட்டிசன்கள் வனிதாவை வாழ்த்தியுள்ளனர்.
காப்பி
வனிதா செய்யும் டாஸ்க் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர். ஒவ்வொரு சீசனிலும் இந்தி பிக் பாஸில் இருந்து டாஸ்கை காப்பியடிப்பது வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











