சீரியல் கொடுமைகள்: இந்த சீனை பாத்தா பேயே செத்துடும்.. மனசாட்சி வேண்டாமா? அநியாயம் பண்றீங்க!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் அண்ணா. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில், நித்யா ராம், பூவிலங்கு மோகன், ப்ரீத்தி சுரேஷ், ஸ்ரீலேகா ராஜேந்திரன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அம்மா இல்லாத தங்கைகளுக்கு அம்மாவாக அண்ணன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் என்ற சீரியல் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.
அண்ணா சீரியலில், ஸ்ரீலேகா ராஜேந்திரன் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரின் தம்பியாக பூவிலங்கு மோகன் சௌந்தரபாண்டி என்கிற ரோலில் நடித்து வருகிறார். இந்த சௌந்தரபாண்டிக்கு காலையில் இருந்து இரவு வரை ஒரே வேலை, தனது தங்கை குடும்பமான மிர்ச்சி செந்தில் அதாவது கதையின் நாயகன் சண்முகத்தின் குடும்பத்தை எப்படி கெடுப்பது என்பது தான். சௌந்தரபாண்டி தினம் தினம் ஏதாவது ஒரு திட்டம் போட அதை ஹீரோ தடுத்துவிடுவார்கள் இதையே மூன்று வருஷமா பாத்துபாத்து ஆடியன்சே 'இதற்கு இல்லையா சார் ஒரு எண்டு' என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

அண்ணா சீரியல்: சீரியல் கொடுமைகள்: இதனால், சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதால், தற்போது சீரியலில் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக, பேயை களமிறக்கி இருக்கிறார் இயக்குநர். சினிமாவிற்கு கை கொடுத்த சிரிப்பு பேய் சீரியலுக்கு கை கொடுக்கும் என்ற ஆசையில் இப்படி செய்திருக்கிறார்கள். இதுதான் இந்த சீரியல் இப்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியதற்கு முக்கிய காரணம். சீரியலில் அக்கா பாண்டியம்மாளை சவுந்தரபாண்டியன் அடித்து கொன்று விடுகிறார். அந்த கொலை பழியை சண்முகத்தின் மீது போட்டுவிடுகிறார். இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வருவதற்காக சண்முகம் 'ஏஐ' உதவியுடன் பாண்டியம்மாள் உருவத்தில் பேயாக வந்து பயமுறுத்துகிறார். அதாவது வழக்கம் போல இருட்டில் ஒரு உருவம் தெரிவது, அதைப்பார்த்து கத்துவது என பல பேய் சீன்கள் வருகின்றன.
அய்யோ பாவம் பேய்: பேயை பார்த்த சௌந்தரபாண்டி, சந்திரமுகி படத்தில் வடிவேலு பயப்படுவது போல திகைத்துப் போய் நிற்கிறார். இதே காட்சியை இன்னும் எத்தனை சினிமா மற்றும் சீரியலில் பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. பேய் என்றால் சந்திரமுகி பேய் தானா, இயக்குநருக்கு புதிதாக யோசிக்க தெரியாதா? என்னதான் காப்பியடித்த சீன் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? அதோடு மட்டுமல்லாமல் பேய்யை விரட்ட காஞ்சனா படத்தில் வருவது போல ஒரு சாமியார் வருவார், அவர் பேயைப்பார்த்து பயந்து ஓடிவிடுவார். கடைசியில் அந்த பேயை விரட்ட பாய் ஒருத்தர் வருவார்.

காப்பி அடித்த சீன்: அதைப்போல, சீரியலிலும், சௌந்தரபாண்டியன் தர்காவிற்கு பாயை தேடி போகிறார். அங்கு ஒட்டு தாடி, மீசை வைத்துக்கொண்டு பாய் கெட்டப்பில் சண்முகம் இருக்கிறார். அந்த கெட்டப்பை பார்த்த அனைவருக்கும் தெரிந்துவிடும், இது போலி பாய் என்று, ஆனால், சொந்த தாய் மாமன் சௌந்தரபாண்டிக்கு மட்டும் தெரியவில்லை. அந்த காலத்தில் கன்னத்தில் மருவை வைத்துக்கொண்டு டபுள் ஆக்சன் செய்தது போல இந்த காலத்திலும் ஒட்டு தாடி, மீசை வைத்துக்கொண்டு அதுவும் அதுவும் 'AI' பேய் என புருடா விடுவது எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு, டைரக்டர் சார் தயவுசெய்து கொஞ்சம் நல்லா யோசிங்க என இணையவாசிகள் இயக்குனரை கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











