சீரியல் கொடுமைகள்: அதர பழசு.. இப்படி கூடவா காப்பி அடிப்பாங்க.. பாக்கவே கடுப்பா இருக்கு!

சென்னை: சினிமாவை விட சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டரை மணி நேரத்தில் முடிந்துவிடும் படத்தை பார்ப்பதை விட, தினம் தினம் புது புது கதைக்களத்துடன் வரும் சீரியலை பார்ப்பதற்கு என்று தனிகூட்டம் இருக்கு. ஆனால், அந்த சீரியலில் சில இயக்குநர் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் நடுரோட்டிலேயே முகமாற்று ஆப்ரேஷன் நடந்தது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அதே போல தற்போதும் கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல், தேங்காயை உருட்டும் கதையாக, சில சீரியல்களில் கொடுமைப்படுத்துகிறார்கள். அந்த கொடுமையைத்த தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம்.

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாரிஜாதம். இதில்,இசை கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்து வருகிறார். தற்போது சீரியலில் கல்யாண சீன் ஒளிபரப்பாகி வருகிறது. இசை விஷாலை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறாள். ஆனால், விஷால் ஸ்ரீஜாவை காதலித்து வருகிறார். இதனால், இசை, ஸ்ரீஜாவை கடத்திவைத்துவிட்டு மணப்பெண் போல மேக்கப் போட்டுக்கொண்டு, யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்கான தலையில் முக்காடு போட்டு முகத்தை மூடி, விஷாலை திருமணம் செய்து கொள்கிறாள். தலையில் முக்காடு கொண்டு எந்த இந்து கல்யாணம் நடக்கிறது என்று தெரியவில்லை. காதுல பூசுத்த ஒரு அளவு வேண்டாமா?.

Tamil serial Zee tamil
Photo Credit:

கொடுமை டா சாமி: கடந்த பத்து வருஷத்திற்கு முன், ராஜ் டிவியில் ஒளிபரப்பான சிந்து பைரவி சீரியலில் பைரவி இப்படித்தான் தலையில் முக்காடு போட்டு ஏமாற்றி திருமணம் செய்து கொள்வாள். அது இந்தி சீரியல் என்பதால், தலையில் முக்காடு போட்டு திருமணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், அதர பழசான ஒரு கதையை காப்பி அடித்து, சீரியலில் வைப்பது எல்லாம் செம கடுப்பா இருக்கு, ஏதாவது புதுசா யோசிங்க என்று இணையவாசிகள் அந்த சீரியலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Tamil serial Zee tamil
Photo Credit:

எல்லாமே காப்பி: இந்த சீரியல் தான் செம கடுப்பு என்றால், கடுப்புக்கு மேல் கடுப்பாக்குவது போல, கெட்டிமேளம் சீரியல் இருக்கு. இந்த சீரியலில் சாய சிங், ஸ்ரீகுமார் லிட் ரோலில் நடித்து வருகின்றனர். அந்த சீரியலில் சாய சிங், ஸ்ரீகுமார் இருவரும் பாசமான தம்பதிகளாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் ஸ்ரீ ஒரு பிரச்சனை காரணமாக ஜெயிலுக்கு போய்விட, ஸ்ரீ யின் அப்பா, உனக்கும் என் மகனுக்கும் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக் கொண்டு சாய வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். பின் சிறையில் இருந்து வீட்டுக்கு வரும் ஸ்ரீ, சாய சிங்கை தேடி செல்கிறார். ஆனால், அவரோ, உனக்கும் எனக்கும் செட்டாகாது, நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஸ்ரீ கோவப்படுவார் என்று பார்த்தா, சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால், அந்த கல்யாணத்தையும், பெண்ணயும் நீ தான் எனக்கு பார்த்து தரவேண்டும் என்று, ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை அப்படியே ஒரு காட்சி கூட மாறாமல் சீரியலில் வைத்துள்ளார். ஏன் இயக்குநர்களுக்கு சுயமா எந்த யோசனையும் வராதா என்ன கொடுமை என இணையவாசிகள் சீரியலை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X