புது ஜூலி இவர் தான்.. சாக்ஷி மேல் செம கடுப்பில் பிக்பாஸ் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி மீரா பேசாத ஒன்றை பேசியதாக பச்சையாக பொய் சொல்வது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி அகர்வால், மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியானபோதே பயங்கரமாக முறைத்தார். சாக்ஷியும் அபிராமியும் சேர்ந்துகொண்டு மீராவை ஏமாத்துக்காரி, ஃபிராடு என கண்டமேனிக்கு பேசினர்.

இதுகுறித்து அப்போதே மதுமிதாவும், சேரனும் சாக்ஷிக்கு அட்வைஸ் செய்தனர். இந்நிலையில் சாக்ஷி படுகேவலமான ஒரு காரியத்தை பிக்பாஸ் வீட்டில் செய்துள்ளார். இதனால் கடுப்படைந்துள்ள நெட்டிசன்ஸ் சாக்ஷியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உனக்கு ஏன் இந்த வேலை

சாக்ஷிக்கு குறும்படம் ரெடி பண்ணுங்க பாஸ்.. உனக்கு ஏன் இந்த வேலை? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

புதிய ஜூலி பிறந்துவிட்டார்

டியர் பிக்பாஸ் ஃபேன்ஸ்.. புதிய ஜூலி பிறந்து விட்டார். அவர்தான் சாக்ஷி அகர்வால்.. என்கிறார் இவர்.

அவ்ளோ பிடிக்கும் போல

சாக்ஷி அகர்வால் பத்த வச்சிட்டா.. சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க அவ்ளோ பிடிக்கும் போல.. என்கிறார் இவர்.

ஒரு குறும்படம் ப்ளீஸ்

சாக்ஷிக்கு ஒரு குறும்படம் ப்ளீஸ்... என்ன கொடுமையான பொய்கள்.. என்கிறார் இவர்.

பத்த வைக்கிற பிரச்சனையா

சாக்ஷிக்கு காது கேட்க்காத பிரச்சனையா.. இல்ல எதையாவது பத்த வைக்கிற பிரச்சனையா.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

வில்லன்களாக மாற்றும் என தெரியாதா?

முந்தைய சீசன்களை வனிதா, அபிராமி மற்றும் சாக்ஷி அகர்வால் பார்க்கவில்லையா? குரூப் ஃபார்ம் பண்றதும் ஒரு நபருக்கு எதிராக சதி செய்வதும் அவர்களை வாழ்நாள் முழுவதும் வில்லன்களாக மாற்றும் என்பது அவர்களுக்குத் தெரியாதா?? என கேட்கிறார் இவர்.

நல்லா கொளுத்தி போடுறீங்கப்பா

இன்றைய எபிசோடிலிருந்து குறும்படத்தை எதிர்பார்க்கலாம்.. நல்லா கொளுத்தி போடுறீங்கபா எல்லாம்.. என கூறுகிறார் இவர்.

சாக்ஷி வெளியே போக வேண்டும்

இன்று வரை மீராதான் வெளியே போக வேண்டும் என நினைத்தேன் ஆனால் தற்போது சாக்ஷி வெளியே போக வேண்டும் என விரும்புகிறேன். நமக்கு என்ன காட்டுகிறார்கள் பெட்ரூமில் ஒன்று பேசுகிறார்கள் வெளியில் மீரா முகெனுடன் மற்றவர்களுடன் பேசுவதில் குறுக்கிட தனக்கு ரைட்ஸ் இல்லை என்கிறார். ஆனால் சாக்ஷி ஏதோ ஒன்றை சொல்கிறார். என கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X