டி.ஆர்.பி.க்காக சிறுவர்களை பயன்படுத்துவதா?: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்

By Siva

Recommended Video

சிறுவர்களை பயன்படுத்துவதா?: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்த மக்கள் இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போன்று 2வது சீசன் சுவாரஸ்யமாக இல்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க ஏதேதோ செய்கிறார்கள். அப்படி இருந்தும் மக்களுக்கு ஆர்வம் ஏற்படவில்லை.

இந்நிலையில் இன்று காலை ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

சிறுவர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்களுடன் சேர்ந்து சில சிறுவர்கள் நடனமாடுகிறார்கள். எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் ஆகாஷ், அம்மா இறந்துட்டாங்க, அப்போ ஓடிப்போயிட்டாங்க என்று ஒரு சிறுவன் வெள்ளந்தியாக கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஆதரவில்லாமல் விடுதியில் இருக்கிறோம். எங்கள் விடுதியில் 100 பேர் இருக்கிறோம் என்று கூறி சிறுவர்கள் அழ, அதை பார்த்து போட்டியாளர்களும் அழுகிறார்கள். வீடியோ பார்க்க உருக்கமாக இருந்தாலும் ஆதரவற்ற சிறுவர்களை அழைத்து வந்து கண்ணீர் விட வைத்து விளம்பரம் தேடும் அளவுக்கு பிக் பாஸ்காரர்கள் இறங்கி வந்துவிட்டார்களே என்று பார்வையாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

கண்டனம்

பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவை பார்த்த பார்வையாளர்களால் கோப்படாமல் இருக்க முடியவில்லை. வீடியோவை பார்த்தவர்கள் இப்படிபட்ட ஒரு நிகழ்ச்சிக்கா நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்கள் என்று கமல் ஹாஸனை கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோபம்

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு கழுவிக் கழுவி ஊத்துபவர்கள் கூட தற்போது ப்ரொமோ வீடியோவை பார்த்து கடுப்பாகி திட்டத் துவங்கிவிட்டனர்.

டிஆர்பி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற இப்படி ஆதரவில்லாத சிறுவர்களை அழைத்து வந்து அழ விடுவதா என்று மக்கள் கோபம் அடைந்துள்ளனர். இனியாவது திருந்துமாறு பிக் பாஸை எச்சரிக்கிறார்கள்.

மோசம்

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க சிறுவர்களை பயன்படுத்தியுள்ளது ரொம்ப கேவலமானது. கிரியேட்டிவ் குழுவுக்கு மூளையே இல்லை என்று மக்கள் கொந்தளித்துள்ளனர். சீப் விளம்பரம் தேடும் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறும் சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X