சென்றாயனை பாத்ரூம் கழுவவிட்ட ஜனனி ஐயர்: விளாசும் நெட்டிசன்ஸ் #BiggBoss2Tamil
Recommended Video

சென்னை: ஜனனி ஐயர் டேனியல் மற்றும் சென்றாயனை பாத்ரூம் கழுவவிட்டது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் அந்த வீட்டின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜனனி ஐயர். தலைவரான கையோடு வீட்டில் உள்ளவர்களுக்கு வேலையை பிரித்துக் கொடுத்துள்ளார்.
அதில் சென்றாயன், டேனியலை பாத்ரூம் கழுவவிட்டுவிட்டார்.

டேனியல்
ஜனனி தன்னை பாத்ரூம் கழுவச் சொன்னதை சென்றாயன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். டேனியலுக்கும் அதே வேலை தான். சுத்தம் செய்யும் அணியில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்று கூறி யாஷிகாவை தங்கள் பக்கம் வரவழைத்துவிட்டார் டேனி.

ஜனனி
ஜனனி சென்றாயன், டேனி ஆகியோரை பாத்ரூம் கழுவச் சொன்னது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. ஜனனி ஏதோ உள்நோக்கத்துடன் இப்படி செய்கிறார் என்று பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர்.
சமூகவலைதளம்
முதல் நாளே சென்றாயனை பாத்ரூம் கழுவ விட்ட ஜனனி ஐயரை நெட்டிசன்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

விளாசல்
ஜனனி ஐயர் சென்றாயனை பாத்ரூம் கழுவ தேர்வு செய்ததற்கு பின்னால் அந்த காரணம் தான் உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். காரணம் என்ன என்பது உங்களுக்கே தெரியும் தானே.


Click it and Unblock the Notifications











