Bigg Boss 3: அதுவே டுபாக்கூர் காதல், இதில் கள்ளக் காதல் வேறா?

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் நடக்கும் கூத்தை பார்த்து தான் சமூக வலைதளங்களில் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.

கவின் அவர் பாட்டுக்கு சீரியல்கள், படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சாக்ஷி ஏதோ கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டிருந்தார். லாஸ்லியா நியூஸ் வாசித்துக் கொண்டிருந்தார்.

இப்படி அவரவர் வேலையை மட்டும் பார்த்தவர்களை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து முக்கோண காதல் கதையில் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் பிக் பாஸ்.

சாக்ஷி

சாக்ஷி

கவினுக்கு சாக்ஷி மீது தான் முதலில் காதல் வந்தது. சரி, வழக்கமாக பிக் பாஸ் வீட்டில் ஒரு காதல் உருவாகும் என்று நினைத்து பார்வையாளர்களும் சும்மா இருந்தார்கள். இந்நிலையில் தான் ஒரு ஓரமாக இருந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த லாஸ்லியாவை கவினுடன் கோர்த்துவிட்டு முக்கோண காதல் கதையை உருவாக்கினார்கள்.

லாஸ்லியா

லாஸ்லியா

முக்கோண காதல் கதை ஆரம்பித்தபோது நன்றாகத் தான் இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த 3 பேரையும் பார்த்தாலே பார்வையாளர்களுக்கு பத்திக்கிட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே காதலி இருக்கும் கவினை சாக்ஷி போலியாக காதலிக்கிறார். இதில் மூன்றாவது ஆளாக வந்த லாஸ்லியாவை ஏதோ அடுத்தவர் புருஷனுடன் கள்ளக் காதல் வைத்திருப்பது போன்று சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். லாஸ்லியா துரோகி என்றால் சாக்ஷியும் துரோகி தான்.

காதலி

காதலி

கவினுக்கு ஏற்கனவே காதலி இருப்பது சாக்ஷிக்கும், லாஸ்லியாவுக்கும் நன்றாகத் தெரியும். கவினும் காதலி இருப்பதை மறந்துவிட்டு அந்த இரண்டு பெண்களுடன் ஆட்டம் போடுகிறார். வெளியே சென்றால் இந்த மூஞ்சியை எல்லாம் நான் பார்ப்பேனா என்று கூறிய சாக்ஷி கவினை உண்மையாக காதலிக்கிறார் என்பதை ஏற்க முடியவில்லை. வெளி உலக தொடர்பே இல்லாமல் இருப்பதால் கவினுடன் ஒட்டி உறவாடுகிறார் சாக்ஷி. அவ்வளவு தான். அதற்கு பெயர் காதல் இல்லை. பிக் பாஸ் தான் காதல் சாயம் பூசி வேடிக்கை பார்க்கிறார்.

 யாஷிகா

யாஷிகா

கடந்த சீசனில் யாஷிகாவை காதலிப்பதாக தெரிவித்தார் மகத். ஒரே இடத்தில் பல நாட்கள் வெளி உலக தொடர்பே இல்லாமல் இருக்கும்போது ஈர்ப்பு ஏற்படத் தான் செய்யும் என்றார் மகத். அந்த ஈர்ப்பு தான் கவினுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பெண்கள் மீது ஏற்பட்டுள்ளது தான் வேடிக்கை. கவின் இன்னும் டிவி சீரியல் மூடில் இருந்து வெளியே வரவில்லை போன்று. முக்கோண காதல் டிராமாவை சீக்கிரம் முடித்து வைத்து அடுத்த கதையை துவங்கவும் பிக் பாஸ் என்பதே பார்வையாளர்களின் கோரிக்கை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X