Just In
- 21 min ago
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- 33 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 2 hrs ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி உறவில் உங்களின் உண்மையான 'தேவை' என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- News
ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண்களை உரசவே பஸ்ஸில் சென்றேன்: பெருமையா கூறிய சரவணன், விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றதாக சரவணன் தெரிவித்ததை பார்த்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சித்தப்பு சரவணன் மிக்சர் மாமா என்று பெயர் வாங்கியுள்ளார். வார இறுதி நாட்களில் உலக நாயகன் கமல் ஹாஸனை பார்த்தால் மட்டும் தான் சரவணன் பேசுவார். அதிலும் குறிப்பாக சக போட்டியாளர்களை கமல் முன்பு அசிங்கப்படுத்துவார்.
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் தான் செய்த கேவலமான காரியத்தை பெருமையாக ஒப்புக் கொண்டுள்ளார் சரவணன்.

பெண்கள்
இப்போ எல்லாம் பஸ்ஸில் நெரிசலில் போகவே முடியாது. அதில் யாரும் வேண்டும் என்று உரசுவது இல்லை. அவனவன் ஆபீஸுக்கு போய்ச் சேரணும் என்று அவசரத்தில் இருப்பான். நாலு பேரு மேல விழுவான், உரசுறதுக்குன்னே வர்றவங்க இருப்பானுக என்று கமல் கூறியதும் சரவணன் பெருமையாக கையை தூக்கினார். கல்லூரியில் படித்தபோது பெண்களை உரசவே பேருந்தில் சென்றதாக கூறினார் சரவணன். அதை கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள் கை தட்டியது தான் வேடிக்கை.
|
விளாசல்
சரவணன் தான் செய்த அசிங்கத்தை தெரிவிக்க அதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது மோசமாக இருந்தது. சரவணன் கூறியதை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு லெஃப்ட் அன்ட் ரைட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாடகி சின்மயியோ யார் அந்த சரவணன் என்று கேள்வி எழுப்ப ஒருவர் சித்தப்பு பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
|
சரவணன்
குழந்தைக்காக இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தவர் தற்போது பெண்களை உரசியதை பெருமையாக வேறு பேசியுள்ளார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் தான் அப்பாக்களின் நிலை புரியும். ஆண் குழந்தை இருக்கும் திமிரில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் சரவணனை திட்டியுள்ளனர். சிலரோ சரவணனை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளனர்.

கமல் ஹாஸன்
சரவணன் பெருமையாக கையை தூக்கியதுமே கமல் ஹாஸன் கோபம் அடைந்து ஏன்யா நீ எல்லாம் ஒரு ஆம்பளயா என்று கேட்டு விளாசியிருக்க வேண்டும். அதை விட்டு பார்வையாளர்களுடன் சேர்ந்து சிரித்திருக்கக் கூடாது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு பெண்களை பெற்ற நீங்கள் இப்படி சரவணனை சும்மாவிடலாமா கமல் சார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.