Bigg Boss Meme: பார்வதி தீய சக்தியா.. இணையவாசிகள் விட மாட்டாங்க போலயே.. நீலாம்பரி வரைக்கும் போயிட்டாங்களே
சென்னை: இணையத்துக்குள் நுழைந்தால் இன்றைக்கு அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்கள் என்றால், அது ஜன நாயகன், பராசக்தி மற்றும் பிக்பாஸில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட கமருதீன் மற்றும் பார்வதி குறித்த விஷயங்கள் தான். அதுவும் பிக்பாஸ் குறித்த செய்திகளை சற்று அதிகமாகவே பார்க்க முடிகிறது.
விஜே பார்வதி மற்றும் கமருதீனுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு சரியானது தான் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கொண்டாடி வருகிறார்கள். ஆட்டம் பாட்டம் போடும் ரசிகர்களையும், கேக் வெட்டி கொண்டாடும் ரசிகர்களையும் பார்க்க முடிகிறது. இந்த ரெட் கார்டு விவகாரம் தொடர்பாக இணையவாசிகள் மீம் வீடியோக்களை உருவாக்கியும் பகிர்ந்து வருகிறார்கள். அதில் பார்வதியைத் தான் அதிகம் அட்டாக் செய்து வருகிறார்கள்.

தீய சக்தி: அதுவும் ஒரு மீம் வீடியோவில் பார்வதியின் தாயார், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று பார்வதியை நோக்கி பாடிய, " துணிவே சக்தி என்ற வார்த்தையையும் அண்மையில் நடிகர் விஜய் தனது கட்சி பொதுக் கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்ட தீய சக்தி என்ற சொல்லையும் இணைத்து உருவாக்கி உள்ள வீடியோ மீம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ மீம்: அதுவும் அரோரா டிக்கெட் டூ ஃபினாலேவை வின் செய்த நிலையில், அவருக்கு அதற்கான டிக்கெட்டை விஜய் சேதுபதி கொடுக்கும் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது. அதை வைத்தும் இணையவாசிகள் மீம் வீடியோ உருவாக்கி பகிர்ந்து வருகிறார்கள். அதாவது படையப்பா படத்தில் நீலாம்பரி எப்படி படையப்பாவின் திருமண வீடியோவை ரீப்ளே செய்து செய்து பார்த்துக் கொண்டு இருப்பாரோ அதேபோல், இந்த ப்ரோமோவை பார்வதி பார்த்துக் கொண்டு இருப்பார் என்றும், பார்வதியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, பார்வதியை நோக்கி எப்படி, துணிவே சக்தி என்ற வார்த்தையைச் சொன்னாரோ, அதேபோல் சொல்வது போலவும், அதற்கு அடுத்து தீய சக்தி, தீய சக்தி என்று விஜய் பேசிய போது பயன்படுத்தியதையும் இணைத்து உருவாக்கி உள்ள மீம் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அடப்பாவிங்களா நீலாம்பரி வரைக்கும் போயிட்டீங்களேப்பா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











