எப்பா.. எடிட்டரு.. நீ இம்புட்டு கஷ்டப்பட வேண்டாம்.. ராவா போட்டாலே அப்படிதான் இருக்கும்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்றும் கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் வாத்து சண்டை தொடருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் வந்த நாள் முதலே இலை மறை காய் மறையாய் சண்டை நடைபெற்று வருகிறது. இருவரில் யார் பெரியவர் என்ற ரீதியில் இருவருக்குள்ளும் சண்டை நடைபெற்று வருகிறது.

நேற்று பள்ளிக்கூட டாஸ்க்கின் போது ஆரம்பித்த சண்டை இன்னும் முடிந்த பாடில்லை. வாத்தில் தொடங்கிய சண்டை தற்போது யாரு குண்டு யாரு ஒல்லி என்ற இடத்தில் வந்து நிற்கிறது.

ஒரு பக்கம் பயிற்சி

ஒரு பக்கம் பயிற்சி

இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் கிச்சனில் ஒருபக்கம் கஸ்தூரியும் வனிதாவும் சண்டை போட்டு வருகின்றனர். மறுபக்கம் சேரன், தர்ஷன், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் நாய், பூனை மற்றும் குரங்குகளை போல் கத்தி வருகின்றனர்.

ஆடியோ எஃபெக்ட்

ஆடியோ எஃபெக்ட்

இதை இரண்டையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கஸ்தூரி வனிதா சண்டைக்கு இடையே ஆடியோ எஃபெக்ட் கொடுத்துள்ளார் எடிட்டர். இதனை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் சண்டை சும்மாவே அப்படிதான் இருக்கும் இதற்கு ஏன் சவுன்ட் எஃபெக்ட் எல்லாம் என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

எப்பா எடிட்டர்..

எப்பா எடிட்டரு...நீ இம்புட்டு கஷ்டப்பட்டெல்லாம் எடிட் பண்ணி எங்கள இரிட்டேட் பண்ண ட்ரை பண்ண வேண்டாம்.. இந்த ரெண்டு சனியனுக பேசறத சும்மா போட்டாலே எங்களுக்கு அப்டிதான் இருக்கும்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

நாங்க என்ன பண்றது?

பிக்பாஸ் எடிட்டிங் டீம் நீயே இப்படி ட்ரோல் பண்ணிட்டா அப்புறம் நாங்க என்ன பண்றது? வெளியே சும்மா ஃபன் பண்றதா எடிட் பண்ணி வனிதா கஸ்தூரி சண்டையை காமெடி பண்ணிட்டான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பிக்பாஸ் பைத்தியமாக்குகிறார்

மதுமிதா உள்ளே இருந்தபோது அனைவரும் அவரை பைத்தியமாக்கினார்கள்.. இப்போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் பிக்பாஸ் பைத்தியமாக்குகிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

குணத்துல பிஞ்சுதான்

அடேய்களா.. சவுண்டு எஃபெக்ட் செம.. காதல் மண்ணாங்கட்டியெல்லாம் முடிஞ்சி இப்ப குண்டு வெர்சஸ் ஒல்லி, அழகு வெர்சஸ் அக்லியா? முதல்ல நீங்க ரெண்டு பேரும் வயசுல முத்தி இருந்தாலும் குணத்துல இன்னும் பிஞ்சுதான்.. இளைஞர்களூககு உதாரணமா இருக்க சொன்னா, உபத்திரவமா இருந்து அவங்க கிண்டல் லெவலுக்கு போய்ட்டிங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஓரமா போங்க வனிதா

காம்ப்ளெக்ஸோ காம்ப்ளானோ ஓரமா போயிட்டு கத்து வனிதா , ஒருத்தங்க பேசுறது கூட கேட்க கூடாதுனு முடிவு பண்ணிட்டா அப்புறம் இவ கிட்டே எதுக்கு பேசுறீங்க கஸ்தூரி நீங்க? என்று கேட்கிறார் இவர்.

அடிச்சு காட்டுங்க

யார் பெரியாள் என்று அடிச்சு காட்டுங்க.. என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X