For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இதுக்கு ஒரு என்ட் கார்டே இல்லையா?...பாரதி கண்ணம்மா சீரியலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

  |

  சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. 2019 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சீரியல் கிட்டதட்ட 1000 எபிசோட்களை நெருங்கி வருகிறது.

  Recommended Video

  Bharathi Kannamma Serial-ஐ தயவு செய்து முடிங்க ... ரசிகர்கள் வேண்டுகோள்

  ஒரு காலத்தில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த இந்த சீரியல், லீட் ரோலில் நடித்த ரோஷினி ஹரிபிரியன் விலகிய பிறகு டிஆர்பி.,யில் கன்னாபின்னாவென அடிவாங்கி வருகிறது. இதற்கு காரணம் அடுத்தடுத்து முக்கிய ரோல்களில் நடித்தவர்கள் மாற்றப்பட்டது மட்டுமல்ல, கதையின் போக்கும் தான்.

  பல ஹிட் படங்களில் இருந்து சில சீன்களை உருவி, எபிசோட்களை கடத்துவது சின்னத்திரையில் லேட்டஸ்ட் டிரெண்டாகி வருகிறது. ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு படி மேலாக போய், ஒரு படத்தில் இருந்து என்னவெல்லாம் சுட முடியுமா அத்தனையையும் சுட்டு, மெயின் கதையை விட்டு கதைக்களம் எங்கு போகிறது என தெரியாமல் போய் கொண்டிருக்கிறது.

  இது மட்டும் தான் பண்ணாம இருந்தீங்க...இப்போ இதுவுமா? ...பாரதி கண்ணம்மாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள் இது மட்டும் தான் பண்ணாம இருந்தீங்க...இப்போ இதுவுமா? ...பாரதி கண்ணம்மாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

  எப்போ சீரியலை முடிப்பீங்க

  எப்போ சீரியலை முடிப்பீங்க

  இதன் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியலை பார்ப்பதையே பலர் நிறுத்தி விட்டதாக நெட்டிசன்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். கொஞ்ச நாள் முன்பு வரை அந்த டிஎன்ஏ டெஸ்ட் எப்போ எடுப்பீங்க என கேட்டு வந்தவர்கள், தற்போது எப்போ சீரிலை முடிப்பீர்கள் என கேட்க துவங்கி விட்டனர். அந்த அளவிற்கு கதை மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

  பாரதி கண்ணம்மாவில் தற்போது

  பாரதி கண்ணம்மாவில் தற்போது

  இரு குழந்தைகளும் கண்ணம்மாவிற்கு பிறந்தது தான் என்ற உண்மை ஒரு வழியாக பாரதிக்கு தெரிந்து விடுகிறது. வழக்கம் போல் ஹேமாவை, கண்ணம்மாவிடம் இருந்து பிரிக்க தீரவிமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார் பாரதி. மற்றொரு புறம் வில்லி வெண்பாவிற்கு, ரோஹித்துடன் நிச்சயதார்த்தம் முடிந்த அன்றே ஃபர்ஸ்ட் நைட்டும் முடிந்து விடுகிறது. இன்னொரு புறம் பாரதியின் அப்பா வேணு, தனக்கு கேன்சர் வந்திருப்பதை குடும்பத்தினரிடம் மறைக்க முயற்சி செய்கிறார்கள்.

   இந்த சீன் எதுக்குடா வச்சீங்க

  இந்த சீன் எதுக்குடா வச்சீங்க

  சரி இதெல்லாம் கூட கதையுடன் தொடர்புடைய கேரக்டர்கள், வேறு கோணத்தில் கதைக்களத்தை நகர்த்துகிறார்கள் என வைத்துக் கொள்ளலாம். ஆனால் இன்று வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் எபிசோடிற்கான ப்ரொமோவில், கண்ணம்மா வேலை செய்யும் ஹாஸ்பிட்டலுக்கு கேன்டீனுக்கு மருந்தடிப்பதாக, பிளம்பர், லிஃப்ட் மெயின்டெனன்ஸ் என்ற பெயரில் மர்ம நபர்கள் சிலர் வருகிறார்கள். அதுவும் கண்ணம்மா வர சொன்னதாக சொல்லி நுழைகிறார்கள்.

  இதுல இது வேறயா

  இதுல இது வேறயா

  மெயின்டனன்ஸ் ரூமிற்குள் சென்றதும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை இணைத்து துப்பாக்கியை அசம்பிள் செய்கிறார்கள். துப்பாக்கிகள் அங்கு அங்கு மறைத்து வைக்கிறார்கள். அதே சமயத்தில் ஹாஸ்பிட்டலுக்குள் வருகிறார் கண்ணம்மா. இந்த ப்ரொமோவில் விக்ரம், கேஜிஎஃப் 2 படங்களின் பிஜிஎம் வேறு. இந்த ப்ரொமோ ரசிகர்களை செம கடுப்பாக்கி உள்ளது.

   படு மட்டமான சீரியல்

  படு மட்டமான சீரியல்

  இந்த சீரியலை எப்போ முடிப்பீங்க...எண்ணலாமோ நடக்குது சீரியல்ல ஆனால் அந்த DNA சோதனை மட்டும் நடக்க மாட்டிங்கிதே. டைரக்டர் இப்போ தான் பீஸ்ட், கேஜிஎஃப் 2 படங்களை பார்த்திருப்பார் போல். அது தான் புதுசா ஒரு ட்ராக் ரெடி பண்ணுறார். விஜய் டிவில ஓடற சீரியல்ல படு மட்டமான சீரியல் இதுதான்.ட்விஸ்ட் என்ற பெயரில் இதை வைத்து இன்னும் எத்தனை நாள் ஓட்ட போறாங்களோ தெரியல.

  இதுக்கு ஒரு முடிவே இல்லையா

  இதுக்கு ஒரு முடிவே இல்லையா

  டைரக்டர் மெயின் கண்டெண்ட் மறந்து எழுதியிருக்காரு, ராஜா ராணி 2 க்கு எழுதின கதை இது ஸ்க்ரிப்டு பேப்பர் மாறிபோச்சி. டைரக்டருக்கு எப்படி சீரியலை முடிக்கனும்னு வழி தெரியல போல. ஏன்டா சம்பந்தம் இல்லாதத எல்லாம் கொண்டு வந்து உயிர வாங்குறீங்க. இதுக்கு ஒரு முடிவே இல்லையா. இதுக்கு இல்லையா சார் ஒரு end என கண்டபடி கொந்தளிப்புடன் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் உச்சபட்சமாக சாபம் விடும் அளவிற்கு போய் விட்டனர்.

  English summary
  Netizens angry with Bharathi Kannamma serial team on latest promo for upcoming episode . They asked to stop the serial.They also commented that except DNA test all other contents are added in this serial.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X